இன்று துவங்குகிறது அமேசானின் ‘கிரேட் இந்தியன் சேல்’: ஆஃபர்களை தெரிந்துகொள்ளுங்கள்

அமேசான் நிறுவனத்தின் ‘கிரேட் இந்தியன் சேல்’ அதிரடி விற்பனை இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் துவங்கி 24-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது....

அமேசான் நிறுவனத்தின் ‘கிரேட் இந்தியன் சேல்’ அதிரடி விற்பனை இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் துவங்கி 24-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. இந்த அதிரடி விற்பனையில், மொபைல், லேப்டாப், மின்சாதன பொருட்கள், வீட்டு மற்றும் சமையலறை உபகரணங்கள், அழகு சாதன பொருட்கள், புத்தகங்கள், தினசரி உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த விற்பனையில், எச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமேசான் பே பயனர்கள் அமேசான் பே பேலன்ஸ் மூலம் 10 சதவீதம் கேஷ்பேக் ஆஃபரை பெறுவர்.

இந்த அமேசான் கிரேட் இந்தியன் சேல் அதிரடி விற்பனையில் மொபைல் மற்றும் மொபைல் சார்ந்த உபகரணங்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எக்ஸ்சேஞ் ஆஃபர்களுக்கு உடனடி தள்ளுபடியும் இந்த அதிரடி விற்பனையில் உண்டு. ஒன்பிளஸ் 5டி மொபைலை இந்த விற்பனையில் ரூ.37,999க்கு பெற முடியும். ஹானட்ர் வியூ 10 மற்றும் எல்.ஜி. வி30+ ஆகிய மொபைல்களுக்கும் தள்ளுபடி உண்டு.

அதேபோல், ஹானர் 6எக்ஸ், சாம்சங் ஆன்5 ப்ரோ, மோட்டோ ஜி5 ப்ளஸ், பிளாக்பெர்ரி கீஒன், எல்.ஜி. ஓ6, கூகுள் பிக்சல் எக்ஸ்.எல்., லெனோவா கே8 நோட், மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்ஃபினிட்டி, நூபியா எம்2 உள்ளிட்ட மொபைல்களுக்கும் தள்ளுபடி உண்டு.

புளூடூத் ஹெட்செட்ஸ்-க்கு 60 சதவீதம் வரை தள்ளுபடியும், மொபைல் கேசஸ்-க்கு 80 சதவீதம் வரையும், பவர் பேங் உள்ளிட்டவற்றுக்கு 65 சதவீதம் வரையும், தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. லேப்டாப்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close