google shopping : இணையதள விளம்பரங்கள் மூலம் அசுர வளர்ச்சியடைந்ஆ, ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணியில் திகழும் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களை தொடர்ந்து, இணையதள முன்னோடியான கூகுள் நிறுவனமும், ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் களமிறங்க தீர்மானித்துள்ளது.
இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில், எதையும் ஆர அமர யோசித்து செய்ய முடியாத நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய அவசர கதியை புரிந்து கொண்ட வர்த்தக நிறுவனங்கள், நமக்கு தேவையான உணவு உள்ளிட்ட எல்லா பொருட்களையும் நமது இடத்திற்கே கொண்டு வந்து தருகின்றன.
அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணியில் உள்ளன.
அமேசான் நிறுவனம், விளம்பரங்களின் மூலம், வாடிக்கையாளர்களை கவர்ந்து அதிக லாபம் ஈட்டிவருகிறது. அந்நிறுவனம் மேலும் ஒருபடி முன்னோக்கி சென்று, தனது தளத்திலேயே, வீடியோ விளம்பரங்களையும் புகுத்த திட்டமிட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் வளர்ச்சியை பார்த்த கூகுள் நிறுவனம், தன்னுடைய வீடியோ இணையதளமான யூடியூப் சேனல் மூலம், ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கான வசதியை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
2019-2020ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் விளம்பர வருவாய் சரிவடைந்திருந்த நிலையில், ஆன்லைன் ஷாப்பிங் என்ற அஸ்திரத்தை, கூகுள் கையில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.