Amazon Freedom Sale 2019: அமேசானில் 3 நாட்களுக்கு தள்ளுபடி சீசன் நீங்க ரெடியா?

Amazon August Freedom Day Sale:ஸ்மார்ட்ஃபோன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்பட உள்ளது.

amazon offers
amazon offers

Amazon India Freedom Sale: சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் ஃப்ரீடம் சேல் என்னும் பெயரில் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்கில் தனக்கென தனி இடத்தை பெற்றிருக்கும் அமேசான நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தள்ளுபடி விலையில் புதிய புதிய சேல்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். விழாக்கால தள்ளுபடி தொடங்கி அமேசான் ப்ரைம் என ஏகப்பட்டது உள்ளது. அந்த வகையில் தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘அமேசான் ஃப்ரீடம் சேல் ‘ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஸ்மார்ட்போன், லேப்டாப், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல்வேறு தயாரிப்புளுக்கு 80சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Amazon India Freedom Sale: எந்த பொருட்களுக்கு தள்ளுபடி முழு விபரம்!

அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி நண்பகல் 12 மணி முதலே இந்த விற்பனைத் திருவிழா தொடங்குகிறது. ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 40 சதவிகிதம் வரையில் இம்முறை ஆஃபர் வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு மேலூங்கி உள்ளது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி M40, ஓப்போ K3 மற்றும் ஒன்ப்ளஸ் 7 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்பட உள்ளது.

இந்த தள்ளுபடி விவரங்கள் மேலோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த பிராண்டுகளின் தயாரிப்புகள், எந்த மாடல்களுக்கு எவ்வளவு ரூபாய் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

. எஸ்பிஐ வங்கியின் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகித உடனடித் தள்ளுபடி உண்டு என்பது வாடிக்கையாளர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ata Sky Annual Flexi Plan

இதை தவிர, டிவி, மிக்ஸி, கிரேண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்களுக்கு 60சதிவிகிதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படும் என்றும், அதில் வாஷிங்மெஷின்கள் 11-ஆயிரம் ரூபாய் ஆஃபரில் விற்கப்படுகிறது என்றும் தகவல் வெளிவந்துள்ளது. பலசரக்கு பொருட்களுக்கு 70சதவிகிதம் தள்ளுபடியும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Amazon india august 4 day freedom sale

Next Story
Tata Sky Annual Flexi Plan : டாட்டா ஸ்கை வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!Tata Sky, Tata Sky Subscription
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com