Amazon India new features: உலகமே ஆன்லைனில் இயங்கிக்கொண்டிருக்க, உலகின் மிகப்பெரிய E-commerce நிறுவனமான அமேசான் தன் அடுத்த புதிய படைப்பை வெளியிட உள்ளது. இனி கன்னடம், மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இந்த செயலியை இயக்க முடியும். பண்டிகை காலத்திற்கு முன்னதாக, குறிப்பாகத் தென்னிந்திய நுகர்வோருக்கு முக்கியத்துவம் அளித்து இதுபோன்ற அப்டேட்டை கொண்டு வரவிருக்கிறது அமேசான்.
"80 சதவிகிதத்தினர் ஆங்கிலம் அல்லாத அதிலும் பெரும்பாலும் அவர்கள் விரும்பும் மொழியையே தேர்வு செய்ய நினைக்கிறார்கள். இதனை
ஆதிக்கம் செலுத்தும் நான்கு தென்னிந்திய மொழிகளில் அதன் தளத்தையும் செயலியையும் வடிவமைப்பதன் மூலம், அமேசான் நிறுவனம் 200 முதல் 300 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெறுவதற்குத் தயாராக உள்ளது. "நாங்கள் பெரும்பாலும் கேட்கும் ஒரு விஷயம் என்னவென்றால், நுகர்வோர்கள் அவர்கள் விரும்பும் மொழியில் அல்லது பிரவுசர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான்" என்று தோட்டா கூறினார்.
"ஆங்கில மொழி பயன்படுத்துவதற்கு எளிதாகவும் அதனை முதன்மை மொழியாய் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களும் உண்டு. அதேபோல, ஆங்கில மொழி வசதியாக இருந்தாலும் பிரவுஸ் செய்வதற்கு ஹிந்தி மொழியைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 52.83 கோடி ஹிந்தி பேசும் அல்லது நாட்டின் மக்கள் தொகையில் 43.63 சதவிகித மக்களுக்காக அமேசான் தன் தளத்திலும் செயலியிலும் ஹிந்தி மொழி விருப்பத்தைச் சேர்த்தது. "ஹிந்தி மொழியைத் தேர்வுசெய்த பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே ஆங்கில மொழியைப் பயன்படுத்தியவர்கள்தான் என்பதை ஹிந்தி மொழி ஆதரவை அறிமுகப்படுத்திய பிறகு நேரலையில் பார்த்தோம். அவர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே பிரவுஸ் மட்டும் செய்தவர்கள் என்றும் பொருள்கள் எதுவும் வாங்கவில்லை என்பதையும் அறிந்தோம். ஆனால், அவர்கள் தங்கள் மொழியை ஹிந்திக்கு மாற்றியபிறகு முதல் முறையாகப் பொருள்களை வாங்கத் தொடங்கினர். மேலும் முன்பை விட இப்போது அடிக்கடி வாங்கவும் தொடங்கினர்” என்று தோட்டா குறிப்பிடுகிறார்.
அமேசானின் வலைத்தளம் மற்றும் செயலியில் ஹிந்தி மற்றும் பிற உள்ளூர் இந்திய மொழிகளை வழங்குவது வாடிக்கையாளர்களுக்கு பிரவுஸ் செய்யவும் ஷாப்பிங் செய்யவும் அதிக நம்பிக்கையை அளிக்கும் என்று தோட்டா நம்புகிறார். "கடந்த ஆறு மாதங்களில், Amazon.in-ல் ஹிந்தி ஆப்ஷனைப் பயன்படுத்தி பிரவுஸ் செய்து பொருள்கள் வாங்கியவர்கள் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்ததை நாங்கள் கண்டோம்" என்றும் கூறினார்.
உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத இணையச் சந்தையான இந்தியா மீது அமேசான் பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் e-commerce மார்க்கெட் இந்தியாவில் தொடர்ந்து செழித்து வருகிறது. மில்லியன் கணக்கான மக்கள் இப்போது இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்தாலும், பெரும்பாலான மக்கள் கூட்டம் நேரடியாகக் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கத்தான் விரும்புகிறது. அமேசான் அதன் வலைத்தளத்தையும் செயலியையும் அவர்கள் பேசும் ஹிந்தி, தமிழ் அல்லது மலையாளம் எனப் பல மொழிகளில் கிடைக்கச் செய்வதன் மூலம் இதுபோன்ற மக்களை எளிதில் அணுகுவதற்கு ஓர் வாய்ப்பாக அமைகிறது.
நுகர்வோர் தங்கள் சொந்த மொழியில் ஷாப்பிங் செய்யும் போது அவர்கள் வாங்கும் முறையை நிறுவனம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தோட்டா கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, அமேசானின் ஹிந்தி பதிப்பைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விலை உயர்ந்த ஐபோன்கள் முதல் ஃபேஷன் ஸ்பீக்கர்கள் வரை அனைத்தையும் வாங்குகிறார்கள். அமேசானில் ஹிந்தி பேசும் வாடிக்கையாளர் மலிவு விலை தயாரிப்புகளைத்தான் வாங்குவார்கள் என்று பொதுமைப்படுத்துவது சரியானதல்ல என்றும் தோட்டா குறிப்பிடுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.