‘அமேசான் பிரைம் டே’ ஆஃபர் வந்தாச்சு… வரிசைகட்டும் புது மாடல் ஸ்மார்ட்போன்கள்

Amazon Prime Day Sale 2020 Offers: ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு கொண்டு ஷாப்பிங் செய்பவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும், ஈஎம்ஐ சலுகையும் வழங்குகிறது.

Amazon, Indiia, amazon prime day sale, amazon prime day sale 2020, amazon prime day sale, prime day sale, prime day sale amazon, amazon prime day sale 2020 date, amazon prime day sale date 2020, amazon prime day sale start date, prime day sale time, prime day start date, amazon prime day sale 2020 offers, amazon prime day sale 2020 offers, amazon prime day sale 2020 india offers, amazon prime day 2020 india

Amazon Prime Day Sale 2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு, அமேசான் பிரைம் டே விற்பனை கொண்டாட்டத்தையும் ஒருகை பார்த்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இந்தியாவில் அமேசான் பிரைம் டே கொண்டாட்டம் ஆண்டின் முற்பகுதியிலேயே நடந்திருக்க வேண்டும். கொரோனா உபயத்தால் அது காலதாமதம் ஆகிவந்த நிலையில், தற்போது இறுதியாக அமேசான் பிரைம் டே விற்பனைக்கான தேதி குறித்தாகிவிட்டது. ஆகஸ்ட் மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்கள் மிகக்குறைந்த விலையில் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஐபோன் 11, ஒன்பிளஸ்8, ஒன்பிளஸ் 7டி, சாம்சங் கேலக்ஸி எம்31, ஓப்போ ஸ்மார்ட்போன்கள், விவோ, ஹானர் மற்றும் மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் என்று அமேசான் அறிவித்துள்ளது. தற்போது விற்பனையில் உள்ள ஸ்மார்ட்போன்களும், இந்த நாட்களில் சந்தைவிலையை விட மிகக்குறைவான விலையில் கிடைக்கும்.

இந்த அமேசான் பிரைம் டே விற்பனையில், OnePlus Nord, Samsung Galaxy M31s ( ஜூலை 30ல் இந்தியாவில் அறிமுகம்), சியோமி நிறுவனத்தின் புதிய போன், OnePlus Nord 12 ஜிபி ராம் மாடல், ஆகஸ்ட் 6 முதல் கிடைக்கும் என்று அமேசான் விளம்பர பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வேரியன்ட் போன், செப்டம்பரில் தான் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய வரவும், இந்த அமேசான் பிரைம் டே விற்பனையில் கிடைக்க உள்ளது.

பட்ஜெட் போன்களான ரெட்மீ 8ஏ டுயல், சாம்சங் கேலக்ஸி எம்21, ஓப்போ ஏ5 2020, சாம்சங் கேலக்ஸி எம் 11உள்ளிட்ட போன்களும், மிகக்குறைந்த விலையில், அமேசான் பிரைம் டே விற்பனையில் கிடைக்கும். பிரீமியம் போன்களான சாம்சங் கேலக்ஸி எஸ் 10, ஒன்பிளஸ் 7டி, ஒன்பிளஸ் 8 புரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களும், இந்த நாட்களில் மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், அமேசான் அதனுடன் இணைந்து அவ்வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு கொண்டு ஷாப்பிங் செய்பவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும், ஈஎம்ஐ சலுகையும் வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Amazon indiia amazon prime day sale amazon prime day sale

Next Story
Asteroid 2020 ND Updates: பூமியை நெருங்கும் மிகப்பெரிய சிறுகோள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com