Advertisment

அடிதூள்; முதல் ஆளாக பாஸ்கீஸ்-ஐ அறிமுகம் செய்த அமேசான்: எப்படி பயன்படுத்துவது?

Amazon passkeys: பாஸ்வேர்ட் ப்ரீ எதிர்காலத்தை நோக்கி தொழில்நுட்ப நிறுவனங்கள் நகர்ந்து செல்லும் நிலையில், இ-காமர்ஸ் தளமான அமேசான் தனது ப்ரௌசர் ( Browser) மற்றும் செயலிக்கு பாஸ்கீஸ் லாக்-கின் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
flipkart no otp, amazon transaction

இ-காமர்ஸ் தளமான அமேசான் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை தனது ப்ரௌசர் மற்றும் செயலிக்கு பாஸ்கீஸ் (Passkeys)  லாக்-கின் (வசதியை அறிமுகம் செய்வதாக கூறியது. பயனர்கள் பாஸ்வேர்ட் இல்லாமல் எளிமையாக லாக்-கின் செய்யும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் பயோமெட்ரிக்ஸ் மூலம் (face/fingerprint scan or PIN) பயன்படுத்தி எளிதாக தங்கள் அக்கவுண்ட் லாக்-கின் செய்யலாம் என்றும் கூறியது. மேலும் பாஸ்கீஸ் மூலம் பயனர் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் எனவும் அமேசான் கூறியது. 

Advertisment

அமேசான் பாஸ்கீஸ் அம்சம் ப்ரௌசர் தளத்தில் முன்பே அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஆப்பிள் (iOS ) பயனர்களுக்கு அமேசான் ஆப் லாக்-கினில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறியுள்ளது. 

அமேசான் பாஸ்கீஸ்  எப்படி பயன்படுத்துவது? 

1. முதலில் அமேசான்  ப்ரௌசர் அல்லது ஐபோனில் அமேசான் ஆப் செல்லவும். 
2. ‘Your Account’ சென்று ‘Login & security’  என்பதை செலக்ட் செய்யவும். 
3.  பாஸ்கீஸ் என்று இருக்கும் அதின் அருகில் ‘Set up’ ஆப்ஷனை கொடுக்கவும். அவ்வளவு தான் அடுத்து வரும் தகவல்களை கொண்டு face/fingerprint scan கொண்டு பாஸ்கீஸ் செட் செய்யலாம்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Amazon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment