புதிய அமேசான் கிண்டில் பேப்பர்ஒயிட்டில் வாசிப்பு அனுபவம் எப்படி இருக்கிறது ?

2 மீட்டர் ஆழமுள்ள தண்ணீருக்குள் ஒரு மணி நேரம் விழுந்திருந்தாலும் எந்த பாதிப்பிற்கும் ஆளாகாது இந்த டிவைஸ்

Amazon Kindle Paperwhite 2018 : புத்தகங்களின் பக்கங்களை புரட்டும் போது ஏற்படும் சலசலப்புகளின் ஓசை விரும்பாதவர்கள் தான் யார் ? புத்தகங்களை நேசிப்பவர்களுக்கான ஓசை அது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரிய பெரிய புத்தகங்களை சுமந்து கொண்டு, நூலகம் வரை சென்று புத்தகங்கள் இரவல் வாங்கி வீடு வந்து படிக்கும் நேரம் யாருக்கும் இல்லை.

அவர்களுக்காக அறிமுகமானது தான் அமேசானின் கிண்டில் பேப்பர்ஒயிட். அறிமுகமான நாட்கள் தொடங்கியே பலரால் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு டிவைஸ்ஸாக கிண்டில் இருந்துள்ளது. 2015ம் ஆண்டிற்கு பிறகு அதனுடைய புதிய/அப்டேட் வெர்சனை தற்போது தான் வெளியிட்டிருக்கிறது அமேசான். பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை என்றாலும், முன் பக்கத்தில் அதிகப்படியான மாற்றங்களை உருவாக்கியுள்ளது அமேசான்.

அமேசான் கிண்டில் பேப்பர்ஒயிட் (2018) ( Amazon Kindle Paperwhite 2018 ) – சிறப்பம்சங்கள்

6 இஞ்ச் நீளமுள்ளது இந்த டிவைஸ்

ரெச்லியூசன் : 300 PPI

8 அல்லது 32 ஜிபி ஸ்டோரேஜ்ஜுடன் வெளியாகிறது இந்த போன்

Wi-Fi-only அல்லது Wi-Fi (4G LTE), மற்றும் Bluetooth மூலம் இணையத்தில் இருந்து புத்தகங்களை படிக்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 21 மணி நேரம் வரை எந்த பிரச்சனையும் இன்றி நீங்கள் புத்தகங்கள் படிக்கலாம்

எடை : 182 கிராம்கள்

அளவு : 167 x 116 x 8.2mm

Amazon Kindle Paperwhite 2018 விலை : ரூபாய் 12,999

Amazon Kindle Paperwhite 2018 திரை

பழைய கிண்டில் பேப்பர்ஒயிட் போலவே புதிய டிவைஸ்ஸும் வெளியாகியுள்ளது. அதே இ-இங்க் ஸ்கிரீன் இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

தொடுதிரையினை நன்றாக மேம்படுத்தியிருக்கிறார்கள். எழுத்துகள் மிக தெளிவாகவும் துல்லியமாகவும் படிப்பதற்கு ஏற்றவகையிலும் தெரியுமாறு திரையின் தன்மை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

வாட்டர் ரெசிஸ்டண்ட்

மழையில் நனைந்தாலும், தண்ணீருக்குள் விழுதாலும் தற்போது பிரச்சனை இல்லை. 2 மீட்டர் ஆழமுள்ள தண்ணீருக்குள் ஒரு மணி நேரம் இந்த டிவைஸ் போடப்பட்டிருந்த போதும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இயங்கியுள்ளது. IPx8 ரேட்டிங்கைப் பெற்றுள்ளது இந்த போன்.

Amazon Kindle Paperwhite 2018

Amazon Kindle Paperwhite 2018

அமேசான் இணைய தள சேவை மூலம் ஒருவர் ஆயிரக்கணக்கான புத்தகங்களை இந்த டிவைஸ் மூலம் படித்துக் கொள்ளலாம். மொழி பேதம் இல்லாமல் எந்த மொழி புத்தகத்தினையும் படித்துக் கொள்ளலாம். ஆடியோ புக் மூலமாக புத்தக ஒலிக்கூறினை கேட்டுக் கொள்ளலாம்.

இந்த டிவைஸ் குறித்த முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close