அமேசான் நிறுவனம் மீஷோவுக்குப் போட்டியாக 'பஜார்' (Bazaar) என்ற புதிய ஷாப்பிங் தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.600 விலைக்குள் ஃபேஷன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வழங்குகிறது.
பஜார் செயலி ஒரு தனித்துவ செயலி அல்ல. ஏற்கனவே அமேசான் ஆப் வைத்திருந்தால் அதன் மூலமாகவே இந்த தளத்தை பயன்படுத்தலாம். அமேசான் நிறுவனத்தை சார்ந்ததாக இருந்தாலும் இதில் சற்று விலை குறைவாக வழங்கப்படுகிறது. உடை, அணிகலன், பேக்ஸ், செப்பல்ஸ், கிட்சன் பொருட்கள் என அனைத்தும் அதில் விற்பனை செய்யப்படுகிறது.
அமேசான் பஜார் பயன்படுத்துவது எப்படி?
Amazon's Bazaar-ல் ஷாப்பிங் செய்ய, நீங்கள் தனி செயலி ஏதும் தேவையில்லை. ஏற்கனவே அமேசான் ஆப் வைத்திருந்தால் இதை பயன்படுத்தலாம்.
1. அமேசான் ஆப் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும்.
2. ஓபன் செய்து சைன் இன் அல்லது புதிய அக்கவுண்ட் கிரியேட் செய்யவும்.
3. இப்போது நேரடியாக ப்ரௌசிங் ப்ராடக்ட் பக்கத்திற்கு செல்லவும்.
4. இங்கு இடப்புறத்தின் மேலே 'Bazaar' என்று ஐகோன் கொடுக்கப்பட்டிருக்கும்.
5. அதை கிளிக் செய்து 'Bazaar' தளத்தைப் பயன்படுத்தலாம். ஷாப்பிங் செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“