Advertisment

அமேசானில் நுழையும் ஏ.ஐ: என்ன வேலை செய்யும் தெரியுமா?

AI to summarise reviews left by customers on products: பயனர்கள் வாங்கிய பொருட்களின் ரிவ்யூவை தொகுத்து வழங்கும் பணியை ஏ.ஐ மேற்கொள்ள உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amazon

Amazon

அமேசான் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான(ஏ.ஐ) அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமேசானிலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Advertisment

ஜெனரேட்டிவ் ஏ.ஐ மூலம் பயனர்கள் வாங்கிய பொருட்களின் ரிவ்யூவை தொகுத்து வழங்கும் எனத் தெவித்துள்ளது. அதாவது, அமேசானில் பயனர்கள் தாங்கள் வாங்கிய பொருட்கள் குறித்து அனுபவத்தை கொடுத்திருப்பர். லைக், டிஸ்லைக் செய்தும், கமெண்ட் எழுதியும் தங்களது அனுபவத்தை தெரிவித்திருப்பர்.

அந்த அடிப்படையில் ஏ.ஐ பயனர் அனுபவத்தை தொகுத்து ஒரு ரிவ்யூவை வழங்கும். இதன் கீழ் ஏ.ஐ ஜெனரேட்டேட் சம்மரி ( Summary is AI-generated) எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வசதியை அமேசான் நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment