Amazon Offers on TV Tamil News: அமேசான் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை அக்டோபர் 16-ம் தேதி ப்ரைம் உறுப்பினர்களுக்கும், 17-ம் தேதி ப்ரைம் உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் தொடங்கவிருக்கிறது. இந்த விற்பனையின் போது, ஏராளமான சலுகைகளுடன் பல தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். ஸ்மார்ட் டிவி வாங்க விரும்போவோர், எம்ஆர்பியை விடக் கணிசமாகக் குறைந்த விலையில் வாங்குவதற்கு இது ஓர் அரிய வாய்ப்பு. வியக்க வைக்கும் தள்ளுபடியில் ஒன்பிளஸ், Mi, எல்ஜி, சாம்சங் மற்றும் சோனி போன்ற பிராண்டுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகளை இங்கே பார்ப்போம்.
ஒன்ப்ளஸ்
இந்த மாபெரும் சலுகை விழாவில் ஒன்ப்ளஸ் டிவி 43Y1- ஐ, ரூ.23,999-க்கு வழங்கவுள்ளது ஒன்ப்ளஸ். டால்பி சவுண்ட் ஆதரவுடன் 20W ஸ்பீக்கர்களைக் கொண்ட 43 இன்ச் முழு HD டிஸ்ப்ளே பேனலை இந்த டிவி கொண்டிருக்கிறது. DCI-P3 வண்ண வரம்பு, நிறுவனத்தின் சொந்த காமா இன்ஜின், anti-aliasing, நாய்ஸ் ரிடக்ஷன், டைனமிக் கான்ட்ராஸ்ட் மற்றும் கலர் ஸ்பேஸ் மேப்பிங் ஆகியவற்றோடு 93 சதவிகித பாதுகாப்புடன் ஒன்ப்ளஸ் டிவி 43Y1 வருகிறது. இது ஆண்ட்ராய்டு TV 9.0 மூல இயக்கப்படுகிறது.
ஒன்ப்ளஸ் 55Q1IN-1 4K QLED டிவி, ரூ.62,899-க்கு விற்பனையின் போது கிடைக்கும். இது இந்தியாவில் கிடைக்கும் மலிவான QLED தொலைக்காட்சிகளில் ஒன்று. இந்த 55 இன்ச் டிவியில் மெல்லிய பெசல், noise cancellation, டைனமிக் கான்ட்ராஸ்ட் மற்றும் டால்பி அட்மோஸ் ஆகியவை உள்ளன. மேலும், இந்த நிறுவனத்தின் சொந்த காமா நிற இன்ஜின் மற்றும் DCI-P3 வண்ண வரம்பின் 93 சதவிகித கவரேஜ் ஆதரவுடன் இந்த டிவி வருகிறது. இது 50W ஸ்பீக்கர்களைக் கொண்டிருக்கிறது மற்றும் அமேசான் அலெக்சா, கூகிள் அசிஸ்டென்ட் இரண்டையும் ஆதரிக்கிறது.
ஷியோமி
ஷியோமி தன்னுடைய Mi டிவி 4A ஹாரிஸான் எடிஷன் 43 இன்ச் வேரியன்ட்டை, ரூ.23,499-க்கு விற்பனை செய்யவுள்ளது. Mi டிவி 4A ஹாரிஸான் பதிப்பு பேசல் இல்லா வடிவமைப்பு மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்தில் முழு HD தெளிவுத்திறனுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு டிவி 9.0-ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் சொந்த பேட்ச்வால் (PatchWall) UI-யினால் இயக்கப்படுகிறது. உள்ளமைக்கப்பட்ட Chromecast இதில் இருக்கிறது. DTS-HD ஒலியை ஆதரிக்கும் 20 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் இதில் உள்ளன.
எல்ஜி
43 இன்ச் 4K UHD ஸ்மார்ட் டிவிதான் இந்த LG 43UM7290PTF. இது, அமேசான் விற்பனையின் போது ரூ.34,990 விலையில் கிடைக்கும். இந்த டிவியில் 4K தெளிவுத்திறன் இருந்தாலும், குறைந்த 50 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்தைதான் கொண்டிருக்கிறது. இது எல்ஜி-யின் சொந்த WebOS இயக்க முறைமையை AI ThinQ அம்சத்துடன் கட்டமைத்துள்ளது. 4K ஆக்டிவ் HDR, 4K அப்ஸ்கேலிங் மற்றும் DTS விர்ச்சுவல்:X போன்ற அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. இதில், அமேசான் அலெக்சா உள்ளமைக்கப்பட்டிருக்கிறது.

சாம்சங்
32 இன்ச் சாம்சங் UA32TE40AAKXXL டிவி ரூ.15,499-க்கு சலுகை விலையில் கிடைக்கும். UA32TE40AAKXXL, நிறுவனத்தின் Wondertainment சீரிஸின் ஒரு பகுதி. 32 இன்ச் HD ரெடி பேனலுடன் HDR ஆதரவும் இதில் கிடைக்கும். அமேசானின் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டென்ட், சாம்சங் ஸ்மார்ட் திங்ஸ், டால்பி டிஜிட்டல் ப்ளஸ் உள்ளிட்ட அம்சங்களும் இதில் உள்ளன.
சாம்சங் செரிஃப் 55 இன்ச் 4K QLED TV QA55LS01TAKXXL, ரூ.99,999 விலைக்கு அமேசானில் கிடைக்கும். குவான்ட்டம் ப்ராசசர் 4K மற்றும் பொருள் கண்காணிப்பு ஒலியுடன் செரிஃப் டிவி வருகிறது. மேலும், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 3840 × 2160 பிக்சல் ரெசல்யூஷனை கொண்டிருக்கிறது. இந்த டிவியில் டால்பி டிஜிட்டல் ப்ளஸ் ஆதரவுடன் 40W ஒலி வெளியீடு பெற முடியும். நிறுவனத்தின் சொந்த TizenOS மூல இந்த டிவி இயங்குகிறது. வாய்ஸ் அசிஸ்டென்ட் அலெக்ஸாவும் இருக்கிறது.
சோனி
சோனி பிராவியா 65X7400H, 65 இன்ச் 4K UHD டிஸ்ப்ளே மற்றும் 3840 × 2160 பிக்சல் ரெசல்யூஷனுடன் 50 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. விற்பனையின்போது இதன் விலை ரூ.1,04,990. இது நிறுவனத்தின் சொந்த எக்ஸ் X1 4K ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ட்ரைலுமினஸ் (Triluminous) டிஸ்ப்ளே, மோஷன் ஃப்ளோ XR மற்றும் தெளிவான ஆடியோ போன்ற அம்சங்களுடன் இந்த டிவி வருகிறது. பயனர்களுக்குத் தடையற்ற விஷுவல் அனுபவத்தை வழங்கக் குறைந்தபட்ச பெசல்களைக் கொண்டிருக்கிறது.
குறிப்பு: இந்த ஸ்மார்ட் டிவிகளை HDFC வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்கள், அமேசான் ஏற்கனவே வழங்கும் தள்ளுபடிக்கு மேல் 10 சதவிகித தள்ளுபடியைப் பெறுவார்கள். இது தவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் அமேசான் Pay UPI பயன்படுத்தி வாங்கினால், ரூ.500 மதிப்புள்ள தினசரி ஷாப்பிங் வெகுமதிகளை வெல்ல வாய்ப்பிருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”