அமேசான்.காம் தனது பிரைம் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையில் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டு வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் புதன்கிழமை தெரிவித்தது.
போட்டியாளர்களான நெட்ஃபிலிக்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னி இதே போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தும் நிலையில் அமேசான் நிறுவனமும் இதை அறிமுகப்படுத்துகிறது. விளம்பரங்கள் ஒளிபரப்புவது தொடர்பாக கடந்த சில வாரங்களாக நிறுவனம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியது.
பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் மற்றும் புதிய பயனர்கள் இல்லாததால் ஸ்ட்ரீமிங் மிகவும் பாதிக்கப்படுவதாக நிறுவனம் கூறியுள்ளது. மேலும் அமேசான் நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி மற்றும் பாரமவுண்ட் குளோபல் ஆகியவற்றுடன் தங்கள் ஸ்ட்ரீமிங் சேவைகள் ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது.
கடந்த புதன்கிழமை அமேசான் பங்குகள் 3% க்கும் குறைவாக இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“