/tamil-ie/media/media_files/uploads/2019/07/lol-1.jpg)
Amazon Prime Day Sale 2019 Offers, Deals
Amazon Prime Day Sale 2019 Offers, Deals : ஜூலை 15 மற்றும் 16 தேதிகளில் அமேசான் ப்ரைம் டே சேல் நடைபெற உள்ளது. இதில் ஸ்மார்ட்போன்கள் முதற்கொண்டு அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் தள்ளுபடி உண்டு. இந்த வருடம் புதிதாக 1000 ப்ரோடக்ட்டுகளை அறிமுகமும் செய்ய உள்ளது அமேசான். எச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடியும் உண்டு என்பது கூடுதல் ஆறுதல். மேலும் 18 முதல் 24 வயது வரை உள்ளவர்களுக்காகவே ப்ரைம் மெம்பர்ஷிப்பை 50% தள்ளுபடியில் அறிவித்துள்ளது அமேசான்.
மேலும் படிக்க : ட்விட்டரில் லீக்கானது சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் ஃபர்ஸ்ட் லுக்!
என்னென்ன டிவைஸ்கள் அறிமுகம் ஆகின்றன ?
ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 7 மிரர் ப்ளூ ஸ்மார்ட்போன், சியோமியின் எம்.ஐ. வையர்லெஸ் ஹெட்போன், ஜாப்ரா எலைட் 85H, ஆக்டிவ் 65T ஹெட்செட்கள் ஆகியவை அறிமுகமாகின்றன. ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் அறிமுகமாவதைப் போன்றே எல்.ஜி. நிறுவனத்தின் W சீரியஸில் உள்ள 30 வேரியண்ட் வெளியாக உள்ளது. சாம்சங்க் காலக்ஸி எம். 40 ஸ்மார்ட்போனின் காக்டையில் ஆரஞ்ச் வேரியண்ட் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு இந்த எம் சீரியஸில் வெளியான எம் 10, எம் 20, எம் 30 ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடியும் உண்டு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.