Amazon Prime membership to get price hike starting tomorrow revised plans Tamil News : இன்று (டிசம்பர் 14) முதல் இந்தியாவில் பிரைம் மெம்பர்ஷிப்பின் விலையை 50 சதவீதம் வரை அதிகரிக்க அமேசான் திட்டமிட்டுள்ளது. சேவையின் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர திட்டங்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த தளத்தில் சப்ஸ்க்ரைப் செய்ய ஆர்வமுள்ள பயனர்கள், விலை உயர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இப்போது செய்யலாம்.
இந்த மாற்றத்தின் விளைவாக, நாளை தொடங்கும் வருடாந்திர பிரைம் மெம்பர்ஷிப் திட்டத்திற்குப் பயனர்கள் ரூ.1,499 செலுத்த வேண்டும். தற்போது 999 ரூபாய்க்குக் கிடைக்கும் இந்த திட்டம், 500 ரூபாய் அல்லது 50 சதவிகிதத்திற்கு மேல் உயரும்.
அமேசான் பிரைமில் தற்போது ரூ.129 விலையில் இருக்கும் மாதாந்திர திட்டம் ரூ.50 அதிகரித்து ரூ.179-ஆக இருக்கும்.
அமேசான் பிரைமுக்கான காலாண்டுத் திட்டமானது ரூ.329-ல் இருந்து ரூ.459-க்கு 39 சதவீதத்திற்கும் மேலாக விலை உயர்வைக் காணும். இந்த விலை உயர்வு, பயனர்களுக்குக் கூடுதல் பலன்களை அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெம்பர்ஷிப், பிரைம் வீடியோ, பிரைம் மியூசிக் மற்றும் பிரைம் ரீடிங்கிற்கான அணுகலைப் பெறும்.
மற்ற செய்திகளில், macOS பயன்பாட்டிற்கான சொந்த பிரைம் வீடியோ பயன்பாட்டை வெளியிடுவதாக அமேசான் சமீபத்தில் உறுதிப்படுத்தியது. ஆப்பிளின் மேக் ஆப் ஸ்டோர் வழியாகப் பயனர்கள் அதை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து நிறுவ முடியும். புதிய ஆப், பிரைம் வீடியோ பயனர்களை ஆஃப்லைனில் பார்ப்பதற்காக ஆப்பிளின் மேக் சாதனங்களில் ப்ரைம் வீடியோ உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யவும் பதிவிறக்கவும் அனுமதிக்கும்.
பிரைம் வீடியோவின் அனைத்து உள்ளடக்கங்களும் மேக் பயன்பாட்டில் கிடைக்கும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. வழக்கமான ஸ்ட்ரீமிங் மற்றும் பதிவிறக்கம் ஆகிய இரண்டிற்கும் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வீடியோ தரத்தைத் தேர்வுசெய்ய முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil