Amazon Prime Video profile: சமீபத்தில் அமேசான் (Amazon) பயனர்களின் சுயவிவர அம்சத்தை உலகம்முழுவதும் வெளியிடுவதாக அறிவித்தது. முதலில் இந்த அம்சத்தை வெளியிட்ட போது அது இந்தியா மற்றும் ஆப்ரிக்காவில் மட்டும் தான் கிடைத்தது. இந்த அம்சம் Netflix’ன் பயனர் சுயவிவரத்தை போன்ற முறையில் செயல்படுகிறது. இது பல பயனர்கள் தாங்கள் பார்க்க விரும்பும் வீடியோக்களை தங்களுக்கான ஒரு சுயவிவரமாக (profiles) உருவாக்க அனுமதிக்கிறது, இதன் மூலம் அனைவரும் தாங்கள் பார்க்க விரும்பும் உள்ளடக்கத்தை தனிப்பட்ட முறையில் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் பயனர்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்காக 6 சுயவிவரங்களை அமைத்துக் கொள்ள முடியும். அமேசான் கணக்குடன் இணைக்கப்பட்ட ஒரு முதன்மை சுயவிவரம் மற்றும் ஐந்து கூடுதல் சுயவிவரம் ஆகியவற்றை அமைத்துக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள், வயது வந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான என கலவையான சுயவிவரங்களை வைத்திருக்க முடியும்.
Amazon Prime Video கணக்கில் நீங்கள் எவ்வாறு பல சுயவிவரங்களை உருவாக்க முடியும் மற்றும் எப்படி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அந்த சுயவிவரங்களை அணுக முடியும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
Amazon Prime Video வில் பயனர் சுயவிவரத்தை எவ்வாறு அமைப்பது.
* primevideo.com என்ற வலைதள முகவரிக்கு சென்று Amazon Prime கணக்கில் லாகின் செய்துக் கொள்ளவும்.
* முகப்பு திரையில் மேல் வலது ஓரத்தில் உள்ள உங்கள் பெயரை தட்டவும்.
* இப்போது கீழே தோன்றும் மெனுவிலிருந்து ‘Add New’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* சுயவிவரத்தின் (profile) பெயரை உள்ளீடு செய்யவும். நீங்கள் யாருடைய பெயரில் சுயவிவரத்தை அமைக்கப் போகிறீர்களோ அவர்களுடைய பெயரை உள்ளீடு செய்யலாம்.
* அந்த சுயவிவரம் (profile) வயது வந்தோருக்கானதா அல்லது குழந்தைகளுக்கானதா என்பதை தேர்வு செய்யவும்.
* அவ்வுளவு தான் சுயவிவரம் அமைக்கப்பட்டுவிட்டது.
சுயவிவரத்தின் (profile) உள் எவ்வாறு sign in செய்ய வேண்டும்.
* நீங்கள் log in செய்யும் போது, Netflix’ஐ போன்று Prime Video ஒரு சுயவிவரத்தை தேர்வு செய்ய கேட்காது.
* ஒரு சுயவிவரத்தை தேர்வு செய்ய நீங்கள் உங்கள் Prime Video கணக்கில் முதலில் log in செய்ய வேண்டும்.
* அடுத்து, மேல் வலது மூலையில் தெரியும் உங்கள் பெயரை நீங்கள் தட்ட வேண்டும்.
* கீழே தோன்றும் மெனுவிலிருந்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் சுயவிவரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் சுயவிவரத்தை உருவாக்கிய பிறகு அதை நீங்கள் லாக் செய்யவும் முடியும். இதனால் வேறு சுயவிவரத்தில் உள்ளவர்கள் நீங்கள் தேர்வு செய்து வைத்துள்ள வீடியோக்களின் பட்டியலை கெடுத்துவிட முடியாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.