Amazon The Great Indian Sale Tamil News: பண்டிகைக்காலம் வந்துவிட்டது. அதனோடு அமேசான் தனது வாடிக்கையாளர்களைச் சலுகைகளில் திகைக்க வைக்கும் ‘தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ விற்பனையையும் ஆரம்பமாகவுள்ளது. ஏற்கெனவே ஃபிளிப்கார்ட் தன்னுடைய ‘பிக் பில்லியன் விற்பனையின்’ தேதிகளை வெளியிட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் அமேசான் தன் சலுகை விற்பனை தேதிகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கம்போல் தி அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை, அனைத்து பிரதான வாடிக்கையாளர்களுக்கும் ஒரு நாள் முன்னதாகவே தொடங்கும். அவர்களால் மற்றவர்களைவிட, விற்பனை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அனைத்து தள்ளுபடியையும் அணுக முடியும். கூடுதலாக, அமேசான் எச்டிஎஃப்சி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அல்லது ஈஎம்ஐ மூலம் வாங்கும்போது அதன் பண்டிகை சலுகைகளின் கீழ் 10 சதவிகித உடனடி தள்ளுபடியை வழங்கவுள்ளது. மேலும் 1,000 ரூபாய் வரையிலான சேமிப்புக்கு, 5 சதவிகிதம் ரிவெட்டிங் கேஷ்பேக் வெகுமதிகளையும் பஜாஜ் ஃபின்சர்வ் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை க்ரெடிட் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, சமையலறை மற்றும் வீட்டுப் பொருட்களுக்கு 60 சதவிகிதம் வரை தள்ளுபடி, ஆடை மற்றும் ஆபரணங்களுக்கு 70 சதவிகிதம் வரை தள்ளுபடி, உணவுப் பொருட்கள் மீது 50 சதவிகிதம் வரை விலை குறைப்பு மற்றும் மின்னணு மற்றும் இதர எலெக்ட்ரானிக்ஸ் பாகங்களுக்கு 70 சதவிகிதம் வரை தள்ளுபடி என அறிவித்திருக்கிறது.
டிவி மற்றும் பெரிய சாதனங்களில் 65 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் புத்தகங்கள், பொம்மைகள் மற்றும் கேமிங் தயாரிப்புகளுக்கு 70 சதவிகிதம் வரை தள்ளுபடி செய்யப்படும். அனைத்து எக்கோ மற்றும் கிண்டில் சாதனங்களும் விற்பனையின் போது அதிகபட்சம் 50 சதவிகிதம் தள்ளுபடியுடன் கிடைக்கும்.
இதற்கிடையில், அமேசான் ஃபேஷன் அனைத்து ஆடை ஆபரணங்களுக்கும் 80 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கத் தயாராக உள்ளது. புதிய அறிமுகங்களைப் பொருத்தவரை, ஒன்பிளஸ் 8T 5G ஸ்மார்ட்போன் அக்டோபர் 14-ம் தேதி வெளியிடவிருக்கிறது. மேலும், அலெக்சா வாய்ஸ் ரிமோட் லைட் கொண்ட ஃபயர்டிவி ஸ்டிக் லைட் விற்பனை அக்டோபர் 15-ம் தேதி தொடங்கப்படும். அதனை முன்கூட்டிய ஆர்டர் செய்யும் வசதி இப்போது இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:Amazon the great indian festival sale date and deals tamil news