மொபைல் பிரியர்கள் ஆவலுடன் காத்திருந்த ஒன் பிளஸ் 6 ஸ்மார்ட்ஃபோனுடன் நடிகர் அமிதாப் பச்சன் செல்ஃபீ எடுத்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஸ்மார்ட்ஃபோன்கள் உற்பதித்தி வரிசையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள சீன நிறுவனமான ஒன் பிளஸ் தனது அடுத்த மாடலான ஒன் பிளஸ் 6 ஸ்மாட்ர்ஃபோனை வரும் 17 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தின நடிகர் அனிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைபடம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், விரைவில் வெளிவரவிருக்கும் ஒன் பிளஸ் 6 ஸ்மார்ட்ஃபோனுடன் செல்பீ எடுத்துள்ளார். கூடவே, அவருடன் ஒன் பிளஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ்வும் அருகில் இருக்கிறார். ஒன் பிளஸ் 6 ஸ்மார்ஃபோன் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வெளிவர இருப்பது இவர்கள் கையில் வைத்திருப்பதை பார்த்தே அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.
T 2798 – Always a pleasure meeting @petelau2007. Looking forward to attending the #OnePlus6 launch event on May 17 ????
Launch Invites go live today on https://t.co/4u02gqa5nb at 10am sharp! Head to @OnePlus_IN for real time updates on the launch and the invites! pic.twitter.com/GrwBkvI4s4
— Amitabh Bachchan (@SrBachchan) May 8, 2018
மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த அனைவரும், ட்விட்டரில் ஒன்ஸ் பிளஸ் ஃபோன் குறித்த கேள்விகளையே அமிதாப்பிடம் கேட்டுள்ளனர். புகைப்படத்தை பார்த்த அனைவரின் கவனமும் ஒன் பிளஸ்6 ஃபோன் மீது தான் இருந்துள்ளது. வரும் 17 ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன் பிளஸ் 6 ஸ்மார்ட்ஃபோன் நடிகர் அமிதாப் கையில் இருப்பதை பார்த்தால் அந்த ஃபோனை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.
அமிதாப் பச்சன் ஒன் ப்ளஸ் நிறுவனத்தில் இந்திய தூதர் என்பது குறிப்பிடத்தக்கது.