திருச்சி தேசிய கல்லூரியில் ப்ராப்ளர் டெக்னாலஜிஸ் (Propeller Technologies) மற்றும் ஜோஹோ (Zoho) இணைந்து நடத்திய தமிழ்நாடு ரோபோட்டிக் லீக் எனும் (Tamilnadu Robotics League) ஒருங்கிணைக்கப்பட்ட தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரோபோ செய்முறை போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
இதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள 280க்கும் மேற்பட்ட பள்ளியை சார்ந்த 3000த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். Senior, Junior, Makeathon என மூன்று பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றது. அதில் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் சொந்த கண்டுபிடிப்பான ரோபோட்களை இயக்கினர்.
இந்த பிரமாண்டமான போட்டிகளில் 3000-க்கும் அதிகமான இளம் விஞ்ஞானிகள் பங்குபெற்றது பாராட்டுக்குரியது. இதில் ஏர்ஷோ ட்ரோன் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இப்போட்டியின் சிறப்பு விருந்தினராக தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியினை துவக்கிவைத்தார்.
ப்ரொபெல்லர் டெக்னாலஜியினால் பயிற்றுவிக்கப்பட்ட பார்வைத்திறனற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் பலர் இப்போட்டிகளில் கலந்துகொண்டது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகும். இப்போட்டிகளில் கலந்துகொண்டோருக்கு சான்றிதழ்களும், போட்டிகளில் வெற்றிப்பெற்றோருக்கு பரிசுகளும் இறுதியில் வழங்கப்பட்டன.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“