‘ஆன்லைன் கேம்’களுக்கு ஆப்பு வைத்த ஆந்திரா: 132 வெப்சைட்டுகள் முடக்கம்

ஆன்லைன் கேமிங், ஆன்லைன் பந்தயம் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதே இந்த சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கங்கள்.

Andhra Pradesh bans online gaming betting jagan mohan reddy tamil news 
Andhra Pradesh bans online gaming

Andhra Peadesh bans Online gaming, betting Tamil News: ஆன்லைன் கேமிங், ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டத்தை ஆந்திர மாநிலம் முற்றிலுமாகத் தடை செய்துள்ளது. மேலும், இதுபோன்ற சேவைகளை வழங்கும் Paytm ஃபர்ஸ்ட் கேம், மொபைல் ப்ரீமியர் லீக், மற்றும் Adda52 உள்ளிட்ட 132 வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான அணுகலைத் தடுக்க அனைத்து இணைய சேவை வழங்குநர்களையும் வழிநடத்துமாறு மையத்தை வலியுறுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 27-ம் தேதி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி எழுதிய கடிதத்தில், மொபைல் போன்கள் மற்றும் கணினிகள் மூலம் மக்கள் அவரவர்களின் வீடுகளிலிருந்தே பயன்படுத்தப்படும் ஆன்லைன் கேமிங் மற்றும் ஆன்லைன் பந்தயத்தில் கடுமையான சமூகத் தீமை இருப்பதைப் பற்றி தன் கவலையைத் தெரிவித்தார்.

கேமிங், பந்தயம் மற்றும் சூதாட்டம் போன்ற சேவைகளை ஆன்லைனில் வழங்குவதில் ஈடுபட்டுள்ள 132 வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளின் பட்டியலை முதலமைச்சர் சமர்ப்பித்தார். இந்த பட்டியலில், ஆன்லைன் கேமிங் மற்றும் அதன் பயனர்களுக்கு கேஷ்பேக் சலுகைகளை வெல்ல வாய்ப்பளிக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020-ன் முக்கிய ஸ்பான்சரான ட்ரீம் 11 இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1974-ம் ஆண்டின் AP கேமிங் சட்டத்தை அரசு திருத்தி, ஆந்திரப் பிரதேசத்தின் அவசரச் சட்டம் 2020-ன் மூலம் ஆன்லைன் கேமிங், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் பந்தயத்தை ஒரு குற்றமாகச் சேர்க்க வேண்டுமெனக் கடந்த செப்டம்பர் 25, 2020 அன்று அறிவித்ததாக அந்த கடிதத்தில் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

“ஆன்லைன் கேமிங், ஆன்லைன் பந்தயம் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதே இந்த சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கங்கள். இது, சட்டத்தின் கீழ் தண்டிக்கத்தக்க ஓர் அறியப்பட்ட குற்றம். மேலும், அனைத்து ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்களும், நிறுவனத்தை நடத்துவதில் ஈடுபட்டவர்களும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியவர்கள்” என்றும் ரெட்டி கூறியுள்ளார்.

ஆன்லைன் பந்தயம் மற்றும் கேமிங் மூலம் பணத்தை இழப்பது, அதன் மீதிருக்கும் மோகம் மற்றும் அதில் எந்தவொரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் அதனால் ஏற்படும் வன்முறை நடத்தை ஆகியவற்றால் பெரும்பாலான மக்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுவதாகவும் முதல்வர் கூறினார்.

புதிய சட்டத்தின் கீழ், ஆன்லைன் கேம்களின் செயல்பாட்டிற்கு உதவுவோர் தண்டனைக்குரியவர்கள் என்றும், இணையச் சேவை வழங்குநர்களின் பங்கு சம்பந்தப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் பயன்பாடுகளின் அணுகலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த நிறுவனங்களுக்கு உதவுவதாகக் கருதி அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். “ஆந்திராவில் அனைத்து ஆன்லைன் கேமிங், சூதாட்டம், பந்தய வலைத்தளங்கள் மற்றும் அதன் பயன்பாடுகளை அணுகுவதைத் தடுக்க அனைத்து இணையச் சேவை வழங்குநர்களையும் வழிநடத்துமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று ரெட்டி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Andhra pradesh bans online gaming betting jagan mohan reddy tamil news

Next Story
ஆப்பிள் ஐபோன் 8-ல் ஃபின்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் கிடையாதாம்! ஆய்வாளரின் கணிப்புiOS 11
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express