scorecardresearch

வந்தாச்சு ஆண்ட்ராய்டு 13 பீட்டா 2 அப்டேட்… உங்க போன் இருக்கானு பாருங்க!

ஆண்ட்ராய்டு 13 பீட்டா 2 அப்டேட் அதிக ஸ்மார்ட்போன்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உங்களின் மாடலும் இடம்பெற்றுள்ளதா என பாருங்கள்.

வந்தாச்சு ஆண்ட்ராய்டு 13 பீட்டா 2 அப்டேட்… உங்க போன் இருக்கானு பாருங்க!

கூகுள் சமீபத்தில் நடத்திய ஐஓ 2022இல், ஆண்ட்ராய்டு 13 இன் பீட்டா 2 வெர்ஷனை, மேலும் சில ஸ்மார்ட்போன்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளது. இதில், ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட பிரச்சினை சரிசெய்யப்பட்டு, பயனர்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் சில பிரச்சினைகள் இருக்கலாம். எனவே, ஆண்ட்ராய்டு 13 பீட்டா 2 அப்டேட், எக்ஸ்டரவாக வைத்திருக்கும் மொபைலில் உபயோகிப்பது சிறந்த சாய்ஸ் ஆகும்.

இந்நிலையில், ஆண்ட்ராய்டு 13 பீட்டா 2 அப்டேட் இயக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியலை இங்கே காணலாம்.

  • பிக்சல் 6 ப்ரோ
  • பிக்சல் 6
  • பிக்சல் 5a
  • பிக்சல் 5
  • Pixel 4a (5G)
  • பிக்சல் 4a
  • பிக்சல் 4 XL
  • பிக்சல் 4
  • Asus Zenfone 8 அல்லது Asus 8z
  • OnePlus 10 Pro
  • Realme GT 2 Pro
  • ஒப்போ ஃபைண்ட் என்
  • Oppo Find X5 Pro
  • Lenovo P12 Pro
  • ஷார்ப் அக்வோஸ் சென்ஸ் 6
  • ZTE ஆக்சன் 40 அல்ட்ரா
  • Vivo X80 Pro
  • டெக்னோ கேமன் 19 ப்ரோ
  • Xiaomi 12
  • Xiaomi 12 Pro
  • சியோமி பேட் 5

Android 13 பீட்டா 2 ஐ நிறுவ, உங்கள் சாதன உற்பத்தியாளரின் Android பீட்டா திட்டத்தில் உங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஆண்ட்ராய்டு 13 சிறப்பு அம்சங்கள்

ஆண்ட்ராய்டு 13 தனியுரிமை பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. ​உங்கள் மொபைலுக்கு ‘வேறுபட்ட’ தோற்றத்தை வழங்க கூடுதல் கஷ்டமைசேஷன் விருப்பங்கள், ஐகான் தீம்கள், வெவ்வேறு மொழிகளில் வேறு வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியும், நோட்டிஃபிகேஷன்ஸ் அனுமதி,பயன்பாடுகளுடன் தகவலைப் பகிர்வதில் கூடுதல் கட்டுப்பாடு, சிறந்த ப்ளூடூத் இணைப்பு ஆதரவு, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Android 13 beta 2 update released phone details

Best of Express