கூகுள் அதன் பிக்சல் சீரிஸ் போன்களுக்கு ஆண்ட்ராய்டு 15 அப்பேட் வெளியிட்டுள்ளது.
போன் மட்டுமல்லாது டேப்லெட்களுக்கு வழங்கியுள்ளது. முதற்கட்டமாக 13 பிக்சல் போன்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 15 அப்டேட் அம்சங்கள்
ஆண்ட்ராய்டு 15 அப்டேட்டில் பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ப்ரைவசி, பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகிறது. குறிப்பாக இதில் ஏ.ஐ அடிப்படையிலான போன் திருட்டு பாதுகாப்பு அம்சம் (AI-backed Theft Detection Lock) இடம்பெறுகிறது.
உங்களை போனை யாரேனும் பறித்துச் செல்வதை கண்டறிந்தால் இந்த அம்சம் தானாகவே ஆக்டிவேட் ஆகி உங்கள் போனை லாக் செய்கிறது. அதே போல் ஸ்மார்ட்டாக சிம் கார்டை கழற்ற முயன்றால் போனை ஆக்ஸஸ் செய்வதற்கான authentication கேட்கப்படும், அது தவறும்பட்சத்தில் போன் லாக் ஆகி விடும்.
ஆண்ட்ராய்டு 15 அப்பேட் பெறும் போன்கள், டேப்
Pixel 6
Pixel 6 Pro
Pixel 6a
Pixel 7
Pixel 7 Pro
Pixel 7a
Pixel 8
Pixel 8 Pro
Pixel 9
Pixel 9 Pro
Pixel 9 Pro XL
Pixel 9 Pro Fold
Pixel Fold
Pixel Tablet
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“