மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், பல்வேறு சேவைகளை வழங்குகிறது. கூகுள் ப்ரௌசர், குரோம், ஜிமெயில், ப்ளே ஸ்டோர் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இதில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ப்ளே ஸ்டோர் அம்சத்தில் பல்வேறு ஆப்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் இந்த சேவையில் புதிய மாற்றறங்களை கொண்டு வந்துள்ளது. அதன் ஸ்பேம் மற்றும் மினிமம் ஃபக்ஷனாலிட்டி பாலிசியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, தரம் குறைந்த (low-quality) மற்றும் செயல்படாத ஆப்ஸ்களை (non-functional) ப்ளே ஸ்டோரில் இருந்து விரைவில் நீக்க உள்ளதாக கூறியுள்ளது.
மேலும் இதற்கு புதிய விதிகளையும் கொடுத்துள்ளது. பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனத் கூகுள் தெரிவித்துள்ளது. தரம் குறைவான ஆப்களை நீக்கும் பணிகளை கூகுள் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 31, 2024 முதல் தொடங்க உள்ளது.
இந்த நடவடிக்கையால் பல்வேறு துறை ஆப்கள் நீக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“