Advertisment

ஓரியோவிற்கு அடுத்து என்ன பெயர் வைக்கலாம் என்று தீர்மானித்த ஆண்ட்ராய்ட்

சாண்ட்விச், கிட்கேட், ஓரியோ வரிசையில் இடம் பெற்றுள்ள புதிய உணவுப் பெயர் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Android Pie

Android Pie

Android pie : ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் என்பது மொபைல் டெக்னாலஜியில் மிக முக்கியமான மைல் கல்லாகும். இன்று அனைவரின் கையிலும் திறன்பேசிகள் இருப்பதற்கும், மிக எளிய முறையில் வாழ்வியலை மாறியதும் கூட ஆண்ட்ராய்ட் வருகைக்குப் பின்பு என்றால் மிகையாகாது.

Advertisment

ஆண்ட்ராய்ட் வருகைக்கு பின்பு கொண்டு வரப்பட்ட செயலிகள் மூலமாக உணவு, வங்கி, பண பரிவர்த்தனை, போக்குவரத்து, பாதுகாப்பு என உறுதி செய்யப்பட்ட அம்சங்கள் மிக அதிகம்.

ஆண்ட்ராய்ட் ஒரு ருசிகரமான இயங்குதளம் தான் காரணம் அதற்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர்கள்.

ஆண்ட்ராய் பை ( Android pie) :

ஆல்பா, பீட்டா, கப்கேக், டோனட், எக்லைர், ஃரோயோ, ஜிஞ்சர்பிரட், ஹனி கோம்ப், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லி பீன், கிட்கெட், லாலிபாப், மார்ஸ்மாலோவ், நக்கெட், ஓரியோ என ஒரே சாப்பாட்டு வெர்சன்கள் தான் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் பெயர்கள் எல்லாம்.

இந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது ஆண்ட்ராய்ட் பை (Android pie)

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ஆண்ட்ராய்ட் 9 அல்லது ஆண்ட்ராய்ட் பை ( Android 9 or Android pie) சிறப்பம்சங்கள்

இந்த திறன்பேசி இயங்குதளம் தற்போது பிக்சல், பிக்சல் எக்ஸ்.எல்., பிக்சல் 2, பிக்சல் 2 எக்ஸ். எல் போன்ற போன்ற திறன்பேசிகளில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

மற்ற திறன்பேசிகளில் இந்த இயங்குதளம் வரும் குளிர்காலத்தில் தான் செயல்பட ஆரம்பிக்கும். Android Pie இயங்குதளம் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு ( Artificial Intelligence ) - ஐ கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த இயங்குதளத்தின் மென்பொருள் டேட்டா மட்டும் சுமார் 1.173 ஜிபியாக இருக்கும் என்பதால் உங்களின் இணைய சேவை சரியாக வேலை செய்கின்றதா என்று பார்த்துவிட்டு பின்பு அப்டேட் செய்ய தொடங்குங்கள்.

எந்தெந்த திறன்பேசிகளில் வருகிறது Android Pie புதிய அப்டேட்

இந்த புதிய அப்டேட்டானது நோக்கியா 7 ப்ளஸ், ஒன்ப்ளஸ் 6, சியோமி மை மிக்ஸ் 2 எஸ், சோனி எக்ஸ்பிரியா XZ2, ஓப்போ R15 ப்ரோ, விவோ X21, எஸ்ஸென்சியல் PH1 ஆகிய போன்களிலும் மிகவிரைவில் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறது ஆண்ட்ராய்ட் நிறுவனம்.

டேஸ்போர்ட்டுடன் வர இருக்கும் இந்த இயங்குதளத்தினை பயன்படுத்தி நாம் அன்றாடம் எந்தெந்த செயலிகளில் எவ்வளவு நேரம் செலவு செய்கிறோம் என்று அறிந்து கொள்ள இயலும். மேலும் எந்த செயலி அதிக அளவு பேட்டரியை பயன்படுத்துகிறது என்றும் நம்மால் அறிந்து கொள்ள இயலும்.

செயலிகளை பயன்படுத்தும் முறை, புகைப்படம் எடுத்தல், ஸ்கிரீன்சாட், எடிட் என ஒவ்வொன்றையும் புதுமைப்படுத்தி வைத்திருக்கிறது இந்த இயங்குதளம்.

Android
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment