2023-ம் ஆண்டில் ரூ.30,000க்கும் குறைவான விலையில் சிறந்த மிட்-ரேஞ் ஸ்மார்ட் போன்கள் நிறைய அறிமுகமாகியுள்ளன. சாம்சங், ஜியோமி. போகோ, iQOO மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்கள் குறைந்த விலையில் சிறந்த அம்சங்கள் அடங்கிய போன்களை அறிமுகம் செய்துள்ளன.
30,000 ரூபாய் மதிப்பில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், சில மாடல் போன்கள் மட்டுமே சிறந்த பேட்டரி லைவ் கொண்ட போன்களாக உள்ளன. அதுகுறித்து இங்கு பார்ப்போம். 1 நாள் முழுக்க பேட்டரி லைவ், பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போன்கள் கொண்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி F54 (Samsung Galaxy F54)
சாம்சங் கேலக்ஸி F54 6,000 mAh பேட்டரியுடன் வருகிறது. 2023 ஆம் ஆண்டில் தற்போது வரை அறிமுகமான ஸ்மார்ட் போன்களில் சிறந்த பேட்டரி லைவ் போன்களில் ஒன்றாகும். 1 முறை சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் வரை பயன்படுத்தலாம். இதேபோல், ஸ்மார்ட்போனில் 108MP கேமரா மற்றும் 120Hz AMOLED டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளன, மேலும் 8 GB ரேம் மற்றும் 256 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட திறன் வாய்ந்த Exynos 1380 SoC மூலம் இயக்கப்படுகிறது.
iQOO நியோ 7
iQOO Neo 7 மிதமான அளவிலான 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இருப்பினும், இதன் தனிச் சிறப்பு 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியாகும். இது வெறும் 10 நிமிடங்களில் 50% பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். டைமன்சிட்டி 8200 SoC உடன் இணைந்து சராசரி அளவுள்ள பேட்டரி, சிறந்த பேட்டரி ஆயுளை வழங்குகிறது. அதிகமாக போன் பயன்படுத்துபவர்களுக்கு கூட ஹீட்டிங் போன்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் 1 நாள் முழுக்க பயன்படுத்த முடியும்.
ஒன்பிளஸ் நார்ட் 2T (OnePlus Nord 2T)
OnePlus Nord 2T ஆனது சராசரி அளவிலான 4,500 mAh பேட்டரியைக் கொண்டிருந்தாலும், எளிதாக ஒரு நாள் முழுக்க போன் பயன்படுத்த முடியும். இது 80W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. Nord 2T என்பது 6.43-இன்ச் 90Hz திரையுடன் கூடிய சிறிய ஸ்மார்ட்போன் ஆகும், இது சிறிய பேட்டரியைக் கொண்டிருந்தாலும் நாள் முழுவதும் பேட்டரி ஆயுளை வழங்க உதவுகிறது. நல்ல பேட்டரி ஆயுள் கொண்ட மிட்- ரேஞ் ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், OnePlus Nord 2T-யை நீங்கள் ட்ரை செய்யலாம்.
ரியல் மி 11 பிரோ+ (Realme 11 Pro+)
நல்ல பேட்டரி ஆயுள் மற்றும் பிரீமியம் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை பெற விரும்பினால், Realme 11 Pro+ மற்றொரு சிறந்த ஸ்மார்ட்போனாகும். இதில் லெதர் பேனல், வளைந்த டிஸ்ப்ளே மற்றும் 5,000 mAh பேட்டரி மூலம் இயங்குகிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் பெரிய பேட்டரி இருந்தாலும், சாதனம் எடை குறைவாக உள்ளது மற்றும் பிரீமியம் ஃபார்ம் பேக்டரை வழங்குகிறது. Realme 11 Pro+ ஆனது நாள் முழுவதும் பேட்டரி ஆயுளை எளிதாக வழங்க முடியும் மேலும் இது 200 MP கேமரா, 12 GB வரை ரேம் மற்றும் 256 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
மேலும் போகோ F5 (Poco F5), இந்த ஸ்மார்ட் போனும் பெரிய 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது மிதமான வேகத்தில் சார்ஜ் செய்யும் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.