ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்.. இந்த கிளீனர் ஆப்களை டவுன்லோட் செய்யாதீங்க!

ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் வங்கி கணக்குகளை பாதிக்கும் வகையில் குறிப்பிட்ட கிளீனர் ஆப் மற்றும் ஆன்டி-வைரஸ் ஆப்களில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் வங்கி கணக்குகளை பாதிக்கும் வகையில் குறிப்பிட்ட கிளீனர் ஆப் மற்றும் ஆன்டி-வைரஸ் ஆப்களில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்..  இந்த கிளீனர் ஆப்களை டவுன்லோட் செய்யாதீங்க!

பெரும்பாலானோர் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்து வருகிறோம். அனைத்து பயன்பாட்டிற்கும் போன் பயன்படுத்த தொடங்கி விட்டோம். கூகுள் பே, பே டி எம் என ஆன்லைன் பண பரிவர்த்தனை மேற்கொள்கிறோம். முக்கியமான தகவல்களை போனில் சேமித்து வைத்திருப்போம். அந்தவகையில், தீங்கிழைக்கும் வைரஸ்கள், ஹேக்கிங் போனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும். ஆன்லைன் கிரைம் தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

இந்நிலையில், கூகுள் பிளே ஸ்டோர் வழியாக குறிப்பிட்ட கிளீனர் ஆப் மற்றும் ஆன்டி-வைரஸ் ஆப்களை குறி வைத்து ஹேக்கிங் செய்யப்படும் வகையில் பாதுகாப்பு குறைப்பாடு அம்சம் கண்டறியப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷார்க்போட் பேங்க்கிங் ட்ரோஜன் (Sharkbot banking trojan) பாதிப்பு கண்டறியப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த செயலிகளுக்கு பாதிப்பு

  1. Mister Phone Cleaner (com.mbkristine8.cleanmaster, over 50,000 downloads)
  2. Kylhavy Mobile Security (com.kylhavy.antivirus, over 10,000 downloads)
Advertisment
Advertisements

அறிக்கையின்படி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, போலந்து, ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரியாவில் உள்ள பயனர்களை குறிவைத்து பாதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் வசிக்கும் இருப்பிடத்தை அடிப்படையாக கொண்டு, செயலி டவுன்லோட் செய்வது ஆபத்தாகும். குறிப்பாக வங்கி கணக்கு பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. ஆபத்தில் ஆழ்த்துகிறது.

தேவையற்ற மெசேஜில் வரும் லிங்க், மெயில் மூலமாக வரும் லிங்க் என எதையும் நம்பி கிளிக் செய்ய வேண்டாம். உறுதிப்படுத்தாத தகவல்களை கிளிக் செய்ய வேண்டாம்.

ஷார்க்போட் பேங்க்கிங் ட்ரோஜன் என்ன பாதிப்பு ஏற்படுத்தும்?

ஷார்க்போட் ட்ரோஜன் போனை ஹேக் செய்து உங்கள் தகவல்களை திருடும். குக்கீஸ்களைத் திருடும். மேலும் வங்கி மற்றும் வேறு பயன்பாட்டிற்கு வரும் நோட்டிபிகேஷன் மெசேஜை தவிர்க்கும். வங்கி பணத்தை மோசடி செய்யும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: