ஐபோன் எதற்கு? ஆன்ட்ராய்டில் இருக்கு இத்தனை வீடியோ சாட்!

Android apps replacement for Facetime வீடியோ சாட்டுக்கு நீங்கள் பார்க்க வேண்டிய மாற்றுப் பயன்பாடுகளின் பட்டியல் இங்கே

Android Whatsapp Google Duo Messenger JioMeet Zoom for Iphone Facetime Tamil News
FaceTime alternative Google Duo

Whatsapp, Google Duo, Messenger, JioMeet, Zoom for Facetime Tamil News : ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு இடம்பெயரும் ஐபோன் பயனர்களுக்கு, வீடியோ அழைப்புகளின் தரம் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று. ஃபேஸ்டைம் என்பது வீடியோ சாட்டுக்கு சிறந்த பயன்பாடு. இது ஆப்பிள் சாதனங்களுக்கு மட்டுமே உரித்தானது. இதில் ஒரே நேரத்தில் 32 பேரைச் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், ஒட்டுமொத்தமாக நல்ல ஒலி மற்றும் வீடியோ தரத்தையும் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, ஏராளமான விருப்பங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் சில மட்டுமே ஃபேஸ்டைம் பயன்பாட்டிற்கு இணையாக உள்ளன.

வீடியோ சாட்டுக்கு நீங்கள் பார்க்க வேண்டிய மாற்றுப் பயன்பாடுகளின் பட்டியல் இங்கே:

வாட்ஸ்அப்

Android Whatsapp Google Duo Messenger JioMeet Zoom for Iphone Facetime Tamil News
WhatsApp video call

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மிகவும் பொதுவான செய்தியிடல் பயன்பாடுகளில் ஒன்று வாட்ஸ்அப். குறுஞ்செய்தி, வாய்ஸ் அழைப்பு தவிர, பேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த சாட் பயன்பாடு, வீடியோ அழைப்பையும் வழங்குகிறது. புதிய தனியுரிமைக் கொள்கை புதுப்பிப்பைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் இருந்தபோதிலும், அதில் பகிரப்படும் செய்திகள் குறியாக்கம் செய்யப்பட்டுள்ளன. வீடியோ அழைப்பில் பயனர்கள் ஒரே நேரத்தில் எட்டு பேர் வரை சேர்க்கலாம். இந்த பயன்பாட்டிற்கு கூகுள் பிளே ஸ்டோரில் ஐந்து பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் 4.2 மதிப்பீடு உள்ளது.

ஜூம்

கோவிட் -19 தொற்றுநோயின் போது, குறிப்பாக நிபுணர்களுக்கு ஜூம் ஒரு பிரபலமான வீடியோ-கான்பரன்சிங் பயன்பாடாக மாறியது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் பதிவிறக்குவதற்குப் பயன்பாடு கிடைக்கிறது. மேலும், நிர்வாகியால் பகிரப்பட்ட இணைப்பு வழியாக மக்கள் மீட்டிங்கில் சேரலாம். இந்த அழைப்புகள் குறியாக்கம் செய்யப்பட்டுள்ளன., மேலும், திரை பகிர்வு மூலம் 100 பேர் வரை ஒரே நேரத்தில் சேர்க்கலாம். தொழில்முறை சந்திப்புகளுக்கு இந்த பயன்பாடு மிகவும் பொருத்தமானது என்பது தெளிவாகிறது. புகழ் இருந்தபோதிலும், பிளே ஸ்டோரில் 500 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களுக்குப் பிறகும் ஜூம் 3.7 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.

ஃபேஸ்புக் மெசஞ்சர்

ஃபேஸ்புக் மெசஞ்சர் பொறுத்தவரைக் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், பயனர்கள் ஃபேஸ்புக்கில் உள்ளவர்களுடன் மட்டுமே இணைக்க முடியும். வீடியோ சாட்டில் எட்டு பேர் வரை சேர்க்கப்படலாம் மற்றும் பங்கேற்பாளர்கள் அழைப்பின் போது வெவ்வேறு முக வடிப்பான்களைப் பயன்படுத்தலாம். பயன்பாட்டில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களும் பிளே ஸ்டோரில் 4.2 மதிப்பீடும் உள்ளது.

கூகுள் டூவோ

ஃபேஸ்டைமுக்கு மற்றொரு மாற்று கூகுள் டூவோ. இதன் வீடியோ தரம் சிறப்பானதாக இருக்கும் மற்றும் குறைந்த ஒளி பயன்முறையும் உள்ளது. இந்த அழைப்புகளில் பயனர்கள் ஒரே நேரத்தில் 32 பங்கேற்பாளர்களைச் சேர்க்கலாம். திரையில் புதிய விளைவுகள் மற்றும் டூடுலை முயற்சி செய்ய ‘ஃபேமிலி மோட்’ முறை உள்ளது. ஐபோன் பயனர்கள் இந்தப் பயன்பாட்டைப் பதிவிறக்கலாம்.

Android Whatsapp Google Duo Messenger JioMeet Zoom for Iphone Facetime Tamil News
Google Duo video-calling app

வீடியோ அழைப்பு பயன்பாட்டைப் பயன்படுத்தப் பயனர்கள் தங்கள் கூகுள் கணக்கில் உள்நுழைய வேண்டும். அவர்கள் இணைப்புடன் குழு அழைப்புகளில் சேரலாம். ஆண்ட்ராய்டு டிவியிலும் யூ.எஸ்.பி வழியாக இணைக்கப்பட்ட வெப்கேமிலும் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். இந்த பயன்பாடு ஒரு பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களுக்குப் பிறகு கூகுள் பிளே ஸ்டோரில் 4.5 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.

ஜியோமீட்

Android Whatsapp Google Duo Messenger JioMeet Zoom for Iphone Facetime Tamil News
JioMeet doesn’t have paid plans yet (Source: JioMeet/Play Store)

தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்டில் நேரடியாகக் களமிறங்கியதால், ஜியோமீட் பட்டியலில் மிக சமீபத்திய நுழைவு. பயன்பாடு இடைமுகத்திற்கு வரும்போது ஜூம் செயலி போன்று மிகவும் ஒத்திருக்கிறது. திரை பகிர்வு, திட்டமிடப்பட்ட மீட்டிங் போன்ற விருப்பங்களுடன் 100 பங்கேற்பாளர்கள் வரை இதில் அனுமதிக்கப்படுவார்கள். பயனர்கள் இணைப்பு வழியாக ஒரு கூட்டத்தில் சேரலாம். பிளே ஸ்டோரில், ஜியோமீட் 3.8 மதிப்பீட்டில் ஐந்து மில்லியன் பதிவிறக்கங்களை மட்டுமே பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Android whatsapp google duo messenger jiomeet zoom for iphone facetime tamil news

Next Story
ரூ.11க்கு 1 ஜிபி டேட்டா …அதிரடி காட்டும் ஜியோ, ஏர்டெல்!Best prepaid Plans Jio BSNL Airtel Vi prepaid packs at low price Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com