Advertisment

பிரத்யேக ட்ரோன் தொழில்நுட்பம்: காப்புரிமை பெற்று அண்ணா பல்கலை குழு அசத்தல்

இந்த புதிய தொழில்நுட்ப ட்ரோன் தரையிறங்க, பொருட்கள் விநியோகம் செய்ய மற்றும் சமமற்ற நிலப்பரப்பிலும் பொருட்களை பிக் அப் செய்ய உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
தடுப்பூசி விநியோகத்திற்கு ட்ரோன்கள்; ஐ.சி.எம்.ஆர் மற்றும் தெலுங்கானாவின் புதிய திட்டம்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள், பிரத்யேக ட்ரோன் தொழில்நுட்பத்தை வடிவமைத்து அதற்கு  காப்புரிமை பெற்றுள்ளனர். இது ட்ரோன் தொழில்நுட்பத்தின் புதிய சகாப்தம் என்றும் கூறியுள்ளனர். 

Advertisment

இந்திய காப்புரிமை அலுவலகம், Intellectual Property India, மினி ட்ரோன் வாகனங்களுக்கான வான்வழி-அடிப்படையிலான அறிவார்ந்த தன்னாட்சி தரையிறங்கும் அமைப்புக்கான காப்புரிமையை வழங்கியுள்ளது.

எம்.ஐ.டியில் உள்ள டாக்டர் கலாம் மேம்பட்ட UAV ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் கே. செந்தில் குமார் இதுபற்றி கூறுகையில், ஆயுதங்கள், வெடிமருந்துகள், மருந்துகள், உணவு போன்ற பொருட்கள் விநியோகம் செய்ய அதை ஒரு இடத்தில் இருந்து எடுத்து வர இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவும். மலைப்பாங்கான நிலப்பரப்பு அல்லது எல்லையில் மனிதர்கள் செல்ல முடியாத இடங்களிலும் ஆயுதப் படையில் இதைப் பயன்படுத்தி பொருட்களை பெற முடியும் எனக் கூறியுள்ளார். தி இந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள UAV (Unmanned Aerial Vehicles ) மேல் மேற்பரப்பில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரின் இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கிய அமைப்பு, தளத்திலும் நிலத்திலும் குறிப்பட்ட பொருட்கள் உள்ள இடத்தை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டது. சமச்சீரற்ற மேற்பரப்பு மற்றும் சாய்வு கொண்ட மலைப்பாங்கான நிலப்பரப்பாக இருந்தாலும் இதை பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், தற்போது எங்களிடம் 50 கிலோ எடையுள்ள பொருட்கள் 20 கி.மீ தூரம் வரை பறந்து கொண்ட செல்லக்க கூடிய  ட்ரோன்கள் உள்ளன.  சுமையை 100 கிலோவாகவும், பறக்கும் தூரத்தை 50 கிமீ ஆகவும் உயர்த்த முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment