ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம்... நாட்டெங்கும் இலவச சுங்கப்பயணம்: ஆக.15 முதல் புதிய ஃபாஸ்டேக் திட்டம்!

நாட்டின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் வழியாக பயணம் செய்யும் தனிநபர் வாகனங்களுக்கு ஆண்டு பாஸ் முறை நடைமுறைக்கு வருகிறது.

நாட்டின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் வழியாக பயணம் செய்யும் தனிநபர் வாகனங்களுக்கு ஆண்டு பாஸ் முறை நடைமுறைக்கு வருகிறது.

author-image
WebDesk
New Update
toll fastag

இதற்கான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார்.

நாட்டின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கச்சாவடிகள் வழியாக பயணம் செய்யும் தனிநபர் வாகனங்களுக்கு ஆண்டு பாஸ் முறை நடைமுறைக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார்.

Advertisment

அவரது அறிவிப்பின்படி, ஆண்டு ரூ.3,000 கட்டணம் செலுத்துவதன் மூலம் புதிய FASTag பாஸ் பெற்று, ஒரு ஆண்டுக்குள் 200 முறைகள் வரை சுங்கக் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். இந்த புதிய முறை 2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரும்.

இந்த பாஸ் முறையில், கார், ஜீப் மற்றும் வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுப் பயன்பாட்டு வாகனங்கள் அல்லது வணிக வாகனங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பாஸ் திட்டம், சுங்கச்சாவடிகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலையும், 60 கிமீ தூரத்திற்குள் சுங்கச் சேவைகள் உள்ளதை முற்றுப்படுத்தும் வகையில் அமையும் எனவும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

பாஸ் பெறுவதற்கான நடைமுறை தொடர்பாக, (ராஜ்மார்க் யாத்ரா’ (Rajmarg Yatra) என்ற செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய ஆண்டு பாஸ் முறை, FASTag முறையின் இன்னொரு முக்கிய கட்டமாகவும், பயணிகளுக்கான செலவைக் குறைக்கும் வகையிலும் அமையும் எனக் கருதப்படுகிறது.

Fastag

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: