இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கை பின்னால் தள்ளி முதலிடம் பிடித்த வாட்ஸ்ஆப்...

இரண்டாவது இடத்தில் இன்ஸ்டாகிராமும், மூன்றாவது இடத்தில் முகநூலும், நான்காவது இடத்தில் ஃபேஸ்புக் மெசேஞ்சரும், ஐந்தாவது இடத்தில் ஐ.எம்.ஓவும் உள்ளது.

App Annie report WhatsApp becomes popular Social Media : தனித்தகவல்கள் திருட்டு மற்றும் பிரைவேட்டாக பதிவிட்ட பதிவுகள் பொதுவெளியில் ஷேர் ஆனது என்று பேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் கடந்த வருடம் பயனாளிகளின் உச்சபட்ச எரிச்சலுக்கும் குழப்பத்திற்கும் ஆளானது.

குடும்பங்கள், நண்பர்கள் என அனைவரையும் ஒருங்கிணைக்கும் தளமாக இருக்கும் என்று தான் பேஸ்புக்கை உருவாக்கினேன். ஆனால் அந்த இலக்கை தகர்த்துவிட்டது தற்போதைய முகநூல் என்று மார்க் ஜூக்கர்பெர்க்கே ஒரு முறை தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

App Annie report WhatsApp becomes popular Social Media

ஆனாலும் யாரும் முகநூல், ட்விட்டர், மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற செயலிகளை பயன்படுத்தாமல் இல்லை. கடந்த ஆண்டு பயனாளிகளின் பயன்பாட்டினைப் பொறுத்து முதலிடம் பெற்றிருக்கும் சமூக வலைதளமாக தேர்வாகியுள்ளது வாட்ஸ்ஆப் செயலி.

கடந்த 24 மாதங்களில் 30% வளர்ச்சி பெற்றுள்ளது வாட்ஸ்ஆப் செயலி. ஜனவரி 2017 முதல் டிசம்பர் 2018 வரையில் உலக அளவில் 35% முன்னேற்றம் அடைந்துள்ளது. அதே காலகட்டத்தில் முகநூலின் வளர்ச்சியானது வெறும் 20% மாகவும், மெசஞ்சரின் வளர்ச்சியானது 15% மாகவும் தான் வளர்ந்துள்ளது.

இன்ஸ்டாகிராம், டிக்டாக், ஸ்நாப்சாட் போன்ற செயலிகளின் மூலமாக மக்கள் செல்போன் பயன்படுத்தும் நேரம் அதிகரித்துள்ளது.  இந்தியா, பிரேசில், இங்கிலாந்து, ஜெர்மனி, மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் குறுஞ்செய்திகள் அனுப்புவதற்காக அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்ஆப் வளர்ந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் இன்ஸ்டாகிராமும், மூன்றாவது இடத்தில் முகநூலும், நான்காவது இடத்தில் ஃபேஸ்புக் மெசேஞ்சரும், ஐந்தாவது இடத்தில் ஐ.எம்.ஓவும் உள்ளது.

மேலும் படிக்க : இந்த வசதிகளுக்காகத் தான் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தோம்… வாட்ஸ்ஆப் புது அப்டேட் 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close