/tamil-ie/media/media_files/uploads/2019/03/Untitled-1.jpg)
Apple 5G iPad Pro
Apple 5G iPad Pro : தற்போது ஆப்பிள் நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபேடினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதில் லிக்விட் க்றிஸ்டல் பாலிமர் போர்ட்ஸ் பயன்படுத்தப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் அனலிஸ்ட்டான மிங்-சி கௌ, ஆப்பிளின் 5ஜி ஐபேட் ப்ரோ 2021ம் ஆண்டில் வெளியாகலாம் என்று கூறியுள்ளது. இதில் வருந்த வேண்டிய விசயம் என்னவென்றால் இதற்கு இடைப்பட்ட வருடங்களில் நம்மால் 5ஜி ஐபேடினை எதிர்பார்க்க இயலாது.
2020ம் ஆண்டில் liquid crystal polymer boards (LCP) எல்.சி.பி போர்டானது ஐபோனிலும் பயன்படுத்த இயலும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியாக இருக்கும் அடுத்த தலைமுறை ஐபேட்கள் எட்ஜ் - டூ - எட்ஜ் டிஸ்பிளேக்கள் மற்றும் ஏ12X சிப்செட்டுடன் வெளியாகலாம்.
ஆரம்பத்தில் 2020ம் ஆண்டிற்கான ஐபோனில் இண்டெலின் 5ஜி மோடத்தினை பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இயலாத காரணத்தால் இண்டெலை நிராகரித்துவிட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து புதிய அப்டேட்டுகளை அளிக்கும் ஆப்பிள்
கடந்த வாரம் ஐபோன் 11ன் போன்கள் குறித்த அப்டேட் வெளியானது. மூன்று பின்பக்க கேமராக்களுடன் அது வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பினை கிளப்பியவாறே மக்கள் மத்தியில் வந்து சேர்ந்தது அந்த அப்டேட்.
மேலும் படிக்க : பேக்-டூ-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்
அதனைத் தொடர்ந்து ஆப்பிள் ஏர்பாட் - 3ன் வெளியீடு குறித்தும் அப்டேட் வெளியானது. மீண்டும் மூன்று நாட்களுக்குள்ளே ஐபோன் எக்ஸ். ஆர் - 2வில் இணைக்கப்பட இருக்கும் கேமராக்கள் குறித்த தகவல்கள் வெளியாகின.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.