ஆப்பிள்… அமேசான்… டிக் டாக்..! அவசியம் அறியவேண்டிய ‘டெக்’ அப்டேட்ஸ்

இதற்கிடையில், வீடியோ பகிர்வு தளமான டிக்டாக், இப்போது "ஒழுக்கமற்ற" மற்றும் "அநாகரீகமான" காணொளிகளின் தளம் எனக்கூறி பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது.

By: October 12, 2020, 6:48:02 PM

Tech Week Tamil news : தொழில்நுட்ப உலகில் மற்றொரு பிஸியான மற்றும் அற்புதமான வாரமாக அமையவுள்ளது. அக்டோபர் 13-ம் தேதி, ஆப்பிள் தன் புதிய ஐபோன் 12 வரிசை வெளியீட்டு நிகழ்வை நடத்தப்போகும் செய்தியுடன் இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. 5 ஜி, சமீபத்திய A14 பயோனிக் ப்ராசசர் மற்றும் புதிய LiDAR ஸ்கேனர் போன்ற அம்சங்களுடன் நான்கு புதிய ஐபோன் 12 மாடல்கள் வெளியாகும் என்கிற வதந்தி ஒரு பக்கம் இருக்கிறது. மேலும், அக்டோபர் 17 முதல் கிரேட் இந்திய ஃபெஸ்டிவல் நடத்தப்போவதாக அமேசான் அறிவித்திருந்தது. ஒரு மாத காலத்திற்கு நடக்கவிருக்கும் இந்த ஆன்லைன் ஷாப்பிங் நிகழ்வு, அதிக வாடிக்கையாளர்களை அமேசானின் சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், வீடியோ பகிர்வு தளமான டிக்டாக், இப்போது “ஒழுக்கமற்ற” மற்றும் “அநாகரீகமான” காணொளிகளின் தளம் எனக்கூறி பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 13 ஆப்பிள் ஐபோன் 12 அறிமுகத்திற்கான ‘ஹாய், ஸ்பீடு’ நிகழ்வு

இந்த வாரத் தொடக்கத்தில், அக்டோபர் 13 அன்று ஓர் விர்ச்சுவல் நிகழ்வை நடத்துவதற்கான தனது திட்டத்தை உறுதிப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். “ஸ்பீட் (Speed)”, புதிய ஐபோன் 12 மாடல்களைக் குறிக்கிறது. அவை 5 ஜியை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 12 வரிசையில்  5 ஜி உடன் நான்கு புதிய மாடல்களை ஆப்பிள் வெளியிடும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். புதிய ஐபோன்கள், முதல் நிலையில் 5.4 இன்ச் மற்றும் 6.1 இன்ச் ஸ்க்ரீன் அளவுகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவுடன் ப்ரோ மாடல்கள் வரும். பொதுவாகச் செப்டம்பர் மாதத்தில்தான் புதிய ஐபோன்களை ஆப்பிள் வெளியிடும். ஆனால், கோவிட் -19 காரணமாக, ஐபோன் வெளியீடு சில வாரங்கள் தாமதமாகும் என்று ஏற்கெனவே நிறுவனம் அறிவித்திருந்தது. அக்டோபர் 13 நிகழ்வில் ஏர்டேக்ஸ் மற்றும் ஏர்போட்ஸ் ஸ்டுடியோவை அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘அநாகரீகமான’ வீடியோக்கள் காரணமாகப் பாகிஸ்தான் டிக்டாக்கை தடை செய்தது

சர்ச்சைகளுக்குக் குறைவில்லா வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக்கை தடைசெய்தது பாகிஸ்தான். டிக்டாக் தனது வீடியோ பகிர்வு தளத்தில் “ஒழுக்கக்கேடான” மற்றும் “அநாகரீகமான” உள்ளடக்கத்தை அகற்றத் தவறியதாகக் கூறி, அந்நாட்டின் தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டாளர் இந்த செயலியைத் தடைசெய்திருக்கிறது. பாக்கிஸ்தானில் 43 மில்லியனுக்கும் அதிகமான முறை இந்த டிக்டாக் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் பகுப்பாய்வு நிறுவனமான சென்சார் டவர் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், “ஒழுக்கக்கேடான” மற்றும் “அநாகரீகமான” உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், டிண்டர் மற்றும் கிரிண்டர் உள்ளிட்ட பல பிரபலமான டேட்டிங் செயலிகளைப் பாகிஸ்தான் தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 17 முதல் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை தொடங்குகிறது

பேண்டமிக் காலகட்டமாக இருந்தபோதிலும், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஷாப்பிங், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபகரணங்கள் மற்றும் இதர பாகங்கள் உள்ளிட்ட பிரபலமான பிரிவுகளில் பல்வேறு தயாரிப்புகளுக்கு அதிக தள்ளுபடியை அமேசான் உறுதியளிக்கிறது. பல வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களை மேம்படுத்த விரும்புவதால், இந்த ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான சலுகைகள் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவுக்கு கூகுள் பிக்சல் 4a  அடுத்த வாரம் வரவிருக்கிறது

ஒரு வழியாக, பிக்சல் 4a இந்தியாவுக்கு வரப்போகிறது. இந்த வாரத் தொடக்கத்தில், கூகுள் தனது பட்ஜெட் ஃபிரெண்ட்லி சாதனமான பிக்சல் 4a வருகிற அக்டோபர் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்தது. பிக்சல் 4a-ன் விலை ரூ.29,999. இந்த விலையில் விற்பதன் மூலம், ஆப்பிள் உள்ளிட்ட தன் போட்டியாளர்களின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போனுடனான போட்டியை கூகுள் குறைத்துள்ளது. பல வல்லுநர்கள் பிக்சல் 4a-ன் சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் விவோவிலிருந்து இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு சிறிது அழுத்தம் கொடுக்கக்கூடும் என்று நம்புகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Apple amzon google pixel tiktok tech news round up in october tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X