ஆப்பிள் அதன் முதல் மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை 'விஷன் ப்ரோ' என்று அறிமுகம் செய்துள்ளது. ஹெட்செட் முதன்மையாக ஒரு ஆக்மென்ட் ரியாலிட்டி சாதனமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் டயலைப் பயன்படுத்தி எளிதாக AR மற்றும் VR முறைகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
மற்ற AR ஹெட்செட்களைப் போலன்றி, விஷன் ப்ரோ ஒரு கன்ட்ரோலருடன் வரவில்லை. பயனர்கள் தங்கள் கண்கள் மற்றும் கைகளைப் பயன்படுத்தி வெவ்வேறு மோட்களுக்கு மாறலாம். பயனர்கள் ஐகான்களின் வரிசைகளுக்கு இடையில் அவற்றைப் பார்ப்பதன் மூலம் ஸ்க்ரோல் செய்யலாம். Siri ஆப்ஷளையும் இந்த ஹெட்செட் ஆதரிக்கிறது. ஆப்பிள் கம்ப்யூட்டர், லேப்டாப், டி.வி போன்றவற்றிலும் ப்ளூடூத் மூலம் இந்த ஹெட்செட்டை இணைத்து பயன்படுத்தலாம்.
ஹெட்செட் 'ஐசைட்' எனப்படும் புதிய அமைப்புடன் உங்கள் கண்களை பயன்படுத்தி இயக்குகிறது. கள் விஷன் ப்ரோவை முழு VR இல் பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஹெட்செட்டின் ஸ்கிரீன் அணிந்திருப்பவர் தனது சுற்றுப்புறத்தைப் பார்க்க முடியாது என்பதைக் குறிக்கும். இந்த சாதனம் நிஜ உலகத்தை முழு வண்ணத்தில் காட்ட முடியும் என்றும், பயன்பாடுகள் மற்றும் சாளரங்கள் போன்ற 3D பொருட்களை நிஜ உலகில் திட்டமிடும் திறன் கொண்டது என்றும் ஆப்பிள் கூறுகிறது.
மிக முக்கியமாக இது சிறந்த வீடியோ மற்றும் ஆடியோகளை ழங்குகிறது. ஹெட்செட் மூலம் உங்கள் ஐ.ஓ.எஸ் ஆப்ஸ்களை பார்க்க முடியும். ஐ.ஓ.எஸ் பயன்படுத்த முடியும். கேம் விளையாடலாம், ஸ்ட்ரீமிங் அமைப்பை பனோரமிக் செட்-அப்பில் பார்க்கவும் உங்களை அனுமதிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“