/tamil-ie/media/media_files/uploads/2022/08/Apple-2.jpg)
ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாகும். ஐபோன், லேப்டாப், வாட்ச் எனப் பல்வேறு சாதனங்களை தயாரிக்கின்றன. இந்தநிலையில் ஆப்பிள் நிறுவனம் ஊழியர்கள் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
சாதி அடிப்படையிலான பாகுபாட்டை வெளிப்படையாக தடை செய்து கொள்கை கொண்டு வந்துள்ளது. ஊழியர்கள் நடத்தை விதிமுறைகளில் இந்த கொள்ளை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த கொள்கையை கொண்டு வரும் முதல் தொழில்நுட்ப நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் மாறியுள்ளது. இது ஊழியர்களிடையே ஒரு கட்டமைப்பை உருவாக்கும் என கூறியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிள் இந்த கொள்கையை கொண்டு வந்தது, ஆனால் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இனம், மதம், பாலினம், வயது ஆகியவற்றிற்கு எதிராக பாகுபாட்டை தடை செய்யும் வகையில் புதிய கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆப்பிள் தவிர்த்து ஐபிஎம் நிறுவனமும் சாதிக்கு எதிரான கொள்ளை விதிகளை புதுப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அதேவேளையில் மற்ற தொழில்நுட்ப நிறுவனமான
அமேசான், டெல், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட் , கூகுள் போன்ற நிறுவனங்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
கடந்த 2020 ஜூன் மாதம் கலிஃபோர்னியாவின் வேலைவாய்ப்புக் கட்டுப்பாட்டாளர் சிஸ்கோ சிஸ்டம்ஸ் தாழ்த்தப்பட்ட பொறியாளர் சார்பாக வழக்கு தொடுத்தது. அதில் இரண்டு உயர் சமூக ஊழியர்கள் சாதிரீதியாக தாக்குவதாகவும், பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.