ஒரு ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பினை எட்டியது ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் வளர்ச்சியில் இது மிக முக்கியமான மைல் ஸ்டோன் என கூறும் டிம் குக்

ஆப்பிள் நிறுவனம் நம் அனைவருக்கும் மிகவும் பரிட்சையமான ஒன்றாகும். ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் ஐபோன்களுக்கு என்றுமே ஒரு தனி வரவேற்பு இருக்கும்.

வியாழனன்று ஆப்பிள் நிறுவனம் 1 ட்ரில்லியன் டாலர் என்ற சந்தை மதிப்பினை எட்டிப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக செயல்படும் டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் 120,000 ஊழியர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில்  “இந்த சாதனை ஒன்றும் அத்தனை பெருமைக்குரிய விசயம் இல்லை. ஆனால் இது ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு மைல் கல்லாகும் என்றும், இந்த சாதனை என்பது ஆப்பிள் நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள், கருவிகள், தொழில்நுட்பங்கள், மற்றும் அதனால் பயனடையும் வாடிக்கையாளர்களின் மூலமே சாத்தியமானது” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

டிம் குக் இதற்கு முன்பாக ஒரு போதும் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பைப் பற்றி வெளிப்படையாக கருத்தினை பதிவு செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனம் உருவான விதம்

ஆப்பிள் நிறுவனம் மூன்று இளைஞர்களால் 1970களில் உருவாக்கப்பட்டது. அதில் ஸ்டீவ் ஜாப்பும் ஒருவர். PC கண்டுபிடிப்பில் முக்கிய பங்கினை வகித்த ஸ்டீவ் ஜாப் பின்னர் 1980களில் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.

கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து, ஆப்பிள் நிறுவனத்தை காப்பாற்றுவதற்காக மீண்டும் நிறுவனத்தில் இணைந்தார்.

மாற்று கோணத்தில் சிந்திப்பதை ஊக்குவிக்கும் ஸ்டீவ் ஜாப் 2007ம் ஆண்டு ஐபோனினை அறிமுகப்படுத்தினார். வெளியான ஆரம்பத்திலேயே சுமார் ஒரு பில்லியன் ஐபோன்கள் விற்பனையானது.

2011ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப் உயிரிழக்க, டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

To read this article in English

ஸ்டீவ் ஜாப் தங்களின் ஊழியர்களுக்கு கடிதம் எழுதும் முறையை பயன்படுத்தி டிம் குக் கடிதம் எழுதியிருக்கிறார். மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்கு நாம் சேர்ந்து உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார் டிம் குக்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close