கோவிட்-19 அறிகுறிகளை பரிசோதிக்கும் 'ஆப்பிள்' கருவி - பயன்படுத்துவது எப்படி?
சுய பரிசோதனைக்கான இந்த கருவி “resource for individuals” வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே மருத்துவ சேவை அளிப்போரின் அறிவுறுத்தல்கள் அல்லது மாநில மற்றும் உள்ளூர் மருத்துவ அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை இது மாற்றாது என Apple தெளிவாக குறிப்பிடுகிறது
கோவிட் -19 சுய பரிசோதனை செய்யும் ஆப் மற்றும் இணையதளத்தை Apple நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
Advertisment
கோவிட் -19 க்கான அறிகுறிகளை பரிசோதிக்கும் ஒரு கருவியாக Apple நிறுவனம் ஒரு ஆப் மற்றும் இணையதளத்தை வெளியிட்டுள்ளது. இந்த இணையதளம் மற்றும் ஆப் ஆகியவை White House-led Coronavirus Task Force, CDC, மற்றும் FEMA ஆகியோர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 ஆப்பை Apple App Store லிருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஒரு இணையதள பதிப்பும் உள்ளது அதை Macs, Windows PCs, Android smartphones மற்றும் tablets வழியாக அணுகலாம் (accessed).
இந்த கருவி சமூக விலகல், சுய தனிமைப்படுத்தல், எவ்வாறு அறிகுறிகளை உன்னிப்பாக கவனிப்பது, பரிசோதனை குறித்தான பரிந்துரைகள் மற்றும் எப்போது ஒரு மருத்துவரை அணுக வேண்டும் போன்றவற்றுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. சுய பரிசோதனைக்கான இந்த கருவி “resource for individuals” வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே மருத்துவ சேவை அளிப்போரின் அறிவுறுத்தல்கள் அல்லது மாநில மற்றும் உள்ளூர் மருத்துவ அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை இது மாற்றாது என Apple தெளிவாக குறிப்பிடுகிறது.
இணையதளம் மற்றும் ஆப் ஆகியவை தற்போதைய உடல்நிலை, சமீபத்திய பயணம் மற்றும் கோவிட் -19 பாதித்த நோயாளிகளுடன் ஏற்பட்ட தொடர்பு குறித்தான பல்வேறு கேள்விகளை உள்ளடக்கியது. உங்கள் பதில்களின் அடிப்படையில் கோவிட் -19 தொற்றுக்கு நீங்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமா இல்லையா என்பது குறித்த பரிந்துரையை இது வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”