iPhone 16 Series Launch Highlights: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்துள்ளது. திங்களன்று, ஆப்பிள் பார்க்கில் நடைபெற்ற ஆண்டு நிகழ்ச்சியில் 4 போன்களை கொண்ட ஐபோன் 16 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்தது.
ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இதில் ஐபோன் 16 ப்ரோ, 16 ப்ரோ மேக்ஸ் அதன் ஸ்கிரீன் அளவுகளால் தனித்துவம் பெறுகிறது. ஐபோன் 16 ப்ரோவில் 6.3 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 16 ப்ரோ மேக்ஸில் 6.9 இன்ச் ஸ்கிரீன் என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் , ஆப்பிள் நிறுவனம் இதுவரை தயாரித்த போன்களில் மிகப்பெரிய ஸ்கிரீன் கொண்ட போன் இதுவாகும்.
இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் ப்ரோ வெர்ஷன் போன்களை தனித்துவமாக்குகிறது. ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இரண்டும் சமீபத்திய A18 ப்ரோ சிப் மூலம் இயக்கப்படுகின்றன. இதில் ஆப்பிள் நுண்ணறிவு மற்றும் AAA கேமிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நிறங்களில் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் 16 ப்ரோவின் விலை ரூ.1,19,900-ல் தொடங்குகிறது, அதே சமயம் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் விலை 1,44,900 ஆகும். இந்தியாவில் செப்டம்பர் 20 முதல் விற்பனைக்கு வருகிறது.
சிறப்பம்சங்கள்
ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 48 எம்.பி பிரைமரி வைட் ஆங்கிள் லென்ஸ் (2வது தலைமுறை குவாட்-பிக்சல் சென்சார்) மற்றும் புதிய 48 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 12 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸுடன் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. 5x ஆப்டிகல் ஜூம் உடன், 120fps வரை 4K வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும் முதல் ஐபோன் இவையாகும்.
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ், இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட ஐபோனை விட மிகப்பெரிய பேட்டரியைக் கொண்டுள்ளது. எனினும் நிறுவனம் சரியான பேட்டரி அளவை இன்னும் வெளியிடவில்லை.
இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன்களை செப்.13-ம் தேதி மாலை 5.30 மணி முதல் முன்பதிவு செய்யலாம். 128 ஜிபி கொண்ட ஐபோன் 16 ரூ.79,900க்கும் ஐபோன் 16 ப்ளஸ் ரூ.89,900க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது,
அதே நேரம் ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,900க்கும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ரூ.1,44,900க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“