ஆப்பிளுக்கும் அக்டோபருக்கும் அப்படி என்ன தான் தொடர்பு ?

மீண்டும் ஒரு மெகா ஈவெண்ட்டிற்காக காத்திருக்கும் ஆப்பிள் வாடிக்கையாளர்கள்....

Apple event on October 30 : வருகின்ற அக்டோபர் 30ம் தேதி ஆப்பிள் நிறுவனம் ஐபேட் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களின் அறிமுக விழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிகழ்வில் அறிமுகப்படுத்த இருக்கும் ஐபேட் ப்ரோ பேஜல் விட்த இல்லாத டிஸ்பிளேக்களுடன் வெளிவர இருக்கிறது. அதில் ஃபேஸ் ஐடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலை மேக்புக் ஏர் விற்பனைக்கு அறிமுகப்படுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.  அதே நேரத்தில் 12 இன்ச் மேக்புக், ஐமேக், மேக் மினி போன்றவைகளும் புதிய புராசஸ்ஸர்கள் பொருத்தப்பட்டு வெளி வர இருக்கிறது.

Apple event on October 30 எங்கே, எப்போது இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது ?

இந்நிகழ்ச்சி ப்ரூக்ளின் அகாடெமி ஆஃப் மியூசிக்கில் இருக்கும் ஹோவர்ட் கில்மன் அரங்கில் நடைபெற இருக்கிறது. நியூயார்க் நகரில் அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஆப்பிள் வாட்ச்கள்

அதே போல் ஆப்பிளின் பென்சிலும் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் 4 மற்றும் ஐபோன் XR அக்டோபர் 26 முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

செப்டம்பர் மாதம் ஆப்பிள் பார்க்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் வாட்ச் இந்தியாவில் விற்பனைக்கு வைக்கப்பட இருக்கிறது. மிகவும் ஸ்டைலான, அழகான, வித்தியாசமான நிறங்களுடன் வர இருக்கும் இந்த வாட்ச் இரண்டு வேறுபட்ட அளவுகளுடன் வெளி வர உள்ளது. 40 mm மற்றும் 44 mm அளவு கொண்ட இந்த வாட்ச்களில் ஜிபிஎஸ் மற்றும் ஜிபிஎஸ் + செல்லுலார் என இரண்டு விதமான தொழில்நுட்ப வேரியண்ட்டுகளும் இருக்கின்றன.

ஃப்ளிப்கார்ட், க்ரோமா, மற்றும் ஆப்பிள் ரீசெல்லர் கடைகளில் இந்த வாட்சினை வாங்கிக் கொள்ளலாம்.

ஆப்பிள் வாட்ச்களின் விலை என்ன?

ஆப்பிள் வாட்ச் 4, ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலுடன் வரும் போது அதன் விலை ரூ. 67, 900 (40 எம்.எம். சைஸ்)வ் ஸ்போர்ட்ஸ் பேண்டுடன் வரும் போது. அதுவே மிலானீஸ் லூப் பேண்டில் இந்த வாட்சின் விலை ரூபாய் 76,900 ஆகும்.  44 எம்.எம். சைஸ் ஸ்டெய்ன்லெஸ் வாட்ச் விலை ரூ. 71, 900 ஸ்போர்ட்ஸ் பேண்டுடன் வரும் போது. அதுவே மிலானீஸ் லூப் பேண்டில் இந்த வாட்சின் விலை ரூபாய் 80,900 ஆகும்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close