/tamil-ie/media/media_files/uploads/2018/09/d216.jpg)
Apple iPhone Xs, iPhone Xs Max and iPhone Xr Launch Event
Apple September Event 2018: ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் தயாரிப்புகளை அமெரிக்காவின் குபெர்டினோவில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் போன்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது. எனவே ஆப்பிள் புதிய ரக போன்களின் அறிமுகம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
ஆப்பிள் புதிய போன்கள் அறிமுக நிகழ்ச்சி, அமெரிக்காவில் ஆப்பிள் பார்க் வளாகத்தில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் இந்திய நேரப்படி செப்டம்பர் 12 இரவு 10.30 மணிக்கு நடந்த நிகழ்வில், ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் மூன்று புதிய ஐபோன்கள், புதிய வெர்ஷன் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் நடந்த இரண்டாவது நிகழ்ச்சி இதுவாகும்.
Apple September Event 2018 Launch: ஆப்பிள் ஐபோன் புதிய மாடல்கள் அறிமுக நிகழ்ச்சியின் தொகுப்பு இங்கே!
12: 23 AM: 64GB, 256GB and 512GBல் இந்த Apple iPhone Xr மொபைல் கிடைக்கிறது. இந்தியாவில் 99,900 முதல் 109,900 வரை இந்த மொபைல் கிடைக்கிறது.
12:20 AM: Apple iPhone Xr மொபைலின் விலை. $749. 256GB கொண்டுள்ளது. அக்டோபரில் விற்பனை தொடங்குகிறது.
12:10 AM: ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் மொபைலை விட, ஒன்றரை மடங்கு கூடுதல் பேட்டரி இந்த ஆப்பிள் ஐபோன் Xrல் உள்ளது. ஹோம் பட்டன் இந்த மொபைலில் இல்லை.
/tamil-ie/media/media_files/uploads/2018/09/d221-300x217.jpg)
12:00 AM: ஆப்பிள் ஐபோன் Xr அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அலுமினியத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. தங்க நிறம், வெள்ளை, கருப்பு, நீலம், மஞ்சள், கோரல் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்க உள்ளது.
ஆப்பிள் ஐபோன் Xr11:58 PM: ஆப்பிள் ஐபோன் XSல் மறுசுழற்சி செய்யப்பட்ட டின் பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.
11:53 PM: ஆப்பிள் ஐபோன் XS மற்றும் ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் மொபைலில் இரட்டை சிம் வசதிகள் கொண்டுள்ளது. e-SIM தொழில்நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது.
11:50 PM:
ஐபோன் XSன் முன்பக்க கேமரா விவரம்11:46 PM: தரமான புகைப்படத்திற்காக Image Signal Processor மேம்படுத்தப்பட்டுள்ளது.
11:40 PM: இவ்விரண்டு போனின் பின்பக்கத்திலும் இரண்டு கேமராக்கள் உள்ளது.முன்பக்க கேமரா அதிவேக சென்சாருடன் 7 MP கொண்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/09/D218-300x217.jpg)
11:33 PM: ஆப்பிள் ஐபோன் XS மற்றும் ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ்: அடுத்த தலைமுறைக்கான நியூரல் engine
புதிய A12 பிராஸசர் கொண்ட ஆப்பிள் ஐபோன் XS மற்றும் ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ்11:24 PM: ஸ்போர்ட் சூப்பர் ரெட்டினா டிஸ்பிளே, 2688*1242 பிக்சல்ஸ் ரிசல்யூஷன்ஸ், 3D டச், வேகமாக செயல்பட 120 Hz திறன், A12 பயோனிக் சிப் - முதல் 7nm பிராஸசர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
11: 18 PM: ஆப்பிள் ஐபோன் XS மற்றும் ஆப்பிள் ஐபோன் XS மேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் ஐபோன் XS11:15 PM: 18 மணி நேரம் தாங்கும் பேட்டரி வசதி இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4ல் உள்ளது. ஸ்டீல் மற்றும் அலுமினியம் ஆகிய இரண்டிலும் மூன்று நிறங்களில் வரும் செப்டம்பர் 21ம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.
11:07 PM: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4ல், உள்ள ECG அளவிடும் திறன் பயனாளர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. மருத்துவம் சார்ந்து இது பெரிய உதவியாகும். அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் ஏற்படும் இதய கோளாறுகள் குறித்தும் நாம் தெரிந்து கொள்ள முடியுமாம்.
ECG கணக்கிட உதவும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 411:04 PM: புதிய 64-பிட் பிராஸசர். இதயத் துடிப்பை அளவிடும் திறன். ECG ஆகியவற்றை அளவிடும் திறனும் இந்த ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 கொண்டுள்ளது.
11:00 PM: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4, 30 சதவிகிதம் பெரிய டிஸ்பிளே கொண்டிருக்கிறது.
10.45 PM: மேடையில் பேசிவரும் டிம் குக், "இன்று நாங்கள் எங்களது இரண்டு முக்கிய படைப்புகளை அறிமுகம் செய்யவிருக்கிறோம். ஆப்பிள் வாட்சின் 4வது சீரிஸ்ஸுடன் இன்று நிகழ்வை ஆரம்பிக்கிறோம். உலகின் மில்லியன் மக்கள் பயன்படுத்தும் வாட்ச் ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச். உலகின் நம்பர்.1 ஸ்மார்ட் வாட்ச் இதுதான்.
Apple Watch Series 410:31 PM: புதிய ஆப்பிள் ஐபோன்கள் அறிமுக நிகழ்ச்சி தொடங்கியது.
10:20 PM: ஆப்பிள் ஐபோன் Xrன் விலை
இதை ஒரு பட்ஜெட் போனாக கருத்தில் கொள்ள முடியாது. காரணம் இதன் ஆரம்பகட்ட விலையானது மட்டும் சுமார் 600 டாலரில் இருந்து 699 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10:05 PM: ஆப்பிள் ஐபோன் நிகழ்ச்சி இன்னும் சில நிமிடங்களில்.. நாம் அந்த அரங்கில்...
ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கம்09:45 PM:
Some familiar faces. And that is the Apple HQ behind. The park is far batter now compared to last year. More greenery. pic.twitter.com/TLK2TKyDij
— Nandagopal Rajan (@nandu79) September 12, 2018
09:30 PM: இன்று அறிமுகமாகும் மூன்று போன்களுக்கும் வரும் 14ம் தேதியில் இருந்து ஃப்ரீ புக்கிங் மூலமாக புக் செய்யப்படும். செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து விற்பனைக்கு வருகிறது. ஐபோன் Xs ப்ளஸ் போனின் விலை 1000 டாலர்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
09:10 PM: ஆப்பிள் ஐபோன் Xr சிறப்பம்சங்கள்
6.1 அங்குல திரையுடன் வெளியாகும் இந்த போன் LCD திரையுடன் வெளியாக இருக்கிறது. மேலே கூறிய இரண்டு போன்களைப் போலவே எட்ஜ் – டூ -எட்ஜ் டிசைனுடன் கூடிய ஃபேஸ் ஐடியுடன் வலம் வர இருக்கும் புது போனாகும். ஒரே ஒரு பின்பக்க கேமராவுடன் வர இருக்கும் இந்த போனும் ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் இயங்க உள்ளது.
08:30 PM: ஆப்பிள் ஐபோன் Xs மற்றும் ஆப்பிள் ஐபோன் Xs ப்ளஸ் சிறப்பம்சங்கள்
இன்றைய நிகழ்வின் மிக கதாநாயகனே இந்த இரண்டு போன்களும் தான். இந்த இரண்டு போன்களையும் சுற்றியே இன்றைய நிகழ்வு நடக்க உள்ளது. ஐபோன் எக்ஸ் போன்ற வருடம் வெளியானது. அதன் அடுத்த வெர்ஷன் தான் இந்த இரண்டு போன்களும். இதில் ஐபோன் Xsன் அளவு 5.8 ஆகும். இது அப்படியே சென்ற வருடம் வெளியான ஐபோன் X பெற்றிருக்கும் சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன்கள், ஆப்பிள் வாட்ச் 4 அறிமுகம்: அமெரிக்காவில் விழா
ஐபோன் Xs ப்ளஸ் – இதுவரை வெளியான ஐபோன்களிலே மிகவும் பெரியது இந்த ஐபோன் மட்டுமே. இந்த இரண்டு போன்களுமே OLED டிஸ்பிளேவுடன் கூடிய எட்ஜ் டூ எட்ஜ் வடிவமைப்பில் வெளியாகிறது.
08:00 PM: குபெர்டினோவில் நிகழ்ச்சி தொடங்க இன்னும் இரண்டு மணி நேரமே மீதமுள்ளது. இரவு 10.00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களின் ப்ரீ - புக்கிங் எப்போது தொடங்குகிறது ?
ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடலின் அப்கிரேடட் மொபைல்களை 2017ம் ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்தது. ஆப்பிள் நிறுவனம் தான் உலகத்தின் முதல் ட்ரில்லியன் டாலர்களை சம்பாதித்த முதல் நிறுவனம். இன்று ஆப்பிள் ஐபோன் மற்றும் அதனுடன் மற்ற ப்ரோடக்டுகள் வெளியாவது இந்த நிறுவனத்தின் எதிர்காலத்தை மேலும் துல்லியமான வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்க வைக்கும் என்றால் மிகையாகாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us