Advertisment

Face ID with a Mask: மாஸ்க் அணிந்தப்படி ஐபோனை அன்லாக் செய்வது எப்படி?

இந்த அப்டேட் நீண்ட காலமாக மாஸ்க்குடன் பேஸ் ஐடி உபயோகிக்கமுடியாமல் தவித்த பயனர்களுக்கு, பெரிய நிவாரணமாக அமைந்திடும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Face ID with a Mask: மாஸ்க் அணிந்தப்படி ஐபோனை அன்லாக் செய்வது எப்படி?

ஆப்பிளின் சமீபத்திய ஐஓஎஸ் 15.4, தற்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. புதிய அப்டேட் மூலம், மாஸ்க் அணிந்திருந்தாலும் பேஸ் ஐடி வாயிலாக அன்லாக் செய்யும் வசதி கிடைக்கிறது. இந்த அப்டேட் நீண்ட காலமாக மாஸ்க்குடன் பேஸ் ஐடி உபயோகிக்கமுடியாமல் தவித்த பயனர்களுக்கு, பெரிய நிவாரணமாக அமைந்திடும். இல்லையெனில், ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்டு போட வேண்டிய கட்டாயம் இருந்தது. மாஸ்க் அணிந்தப்படி பேஸ்ஐடி அன்லாக் செய்யும் முறையை கீழே காணுங்கள்

Advertisment

மாஸ்க்-வுடன் பேஸ் ஐடி அன்லாக் வசதியை ஆதரிக்கும் சாதனங்கள் எவை?

ஆப்பிள் கூற்றுப்படி, ஐபோன் 12 மற்றும் அடுத்த பதிப்புகளில் மட்டுமே பேஸ் ஐடி மாஸ்க்-வுடன் அன்லாக் செய்ய முடிகிறது. அதாவது, ஆப்பிள் ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய மொபைலுக்கு மட்டுமே கிடைத்துள்ளன. ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ் ஆகிய சாதனங்களுக்கு வழங்கவில்லை. இந்த iOS 15.4 வசதியை பெற நீங்கள் முதலில் Settings>General> Software update செய்ய வேண்டும்.

publive-image

‘Face ID with a Mask’ பயன்படுத்துவது எப்படி?

நீங்கள் iOS 15.4 இன்ஸ்டால் செய்ததும், ஆப்பிள் மீண்டும் ஒருமுறை பேஸ் ஐடி செட் செய்ய அறிவுறுத்தும். அப்போது அதில் இரண்டு ஆப்ஷன்கள் கேட்கப்படும். ஒன்று, ‘Face ID with a Mask,’அல்லது மாஸ்க் இல்லாமல் உபயோகிப்பது. இதில், 2ஆவது ஆப்ஷனை தேர்வு செய்தால், அதில் புதிதாக எதுவும் இருக்கப்போவதில்லை.

முதல் ஆப்ஷன் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், நீங்கள் மீண்டும் பேஸ் ஐடி பதிய வேண்டும். ஆனால், அப்போது மாஸ்க் அணியக்கூடாது. அதே சமயம், நீங்கள் கண்ணுக்கு கிளேஸ் யூஸ் செய்பவர் என்றால், அதனை அணிந்தப்படியே பேஸ் ஐடி ஸ்கேன் செய்ய வேண்டும்.

publive-image

ஒருவேளை கண்ணாடி அணியாமல், பேஸ் ஐடி ஸ்கேன் செய்திருக்கும் பட்சத்தில், ஆப்பிள் மீண்டும் மாஸ்க்-வுடன் பேஸ் ஐடி அன்லாக் செய்திட அறிவுறுத்தும். ‘Add Glasses’ தனி வசதி மட்டுமே ஆகும்.

பேஸ்ஐடி ஓட்டுமொத்த முகம் முழுவதும் துல்லியமாக ஸ்கேன் செய்யும். எனவே, பேஸ்ஐடி உபயோகிக்கும் போது, சன்கிளேஸ் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஆப்பிள் உங்கள் கண்களை சுற்றியுள்ள பகுதிகளையும் ஸ்கேன் செய்திடும்.

இதுதவிர,சஃபாரி மற்றும் ஆப்பிள் பே போன்ற செயலிகளில் பாஸ்வேர்ட் தானாகவே டைப்பாக பேஸ் ஐடி உதவியாக இருக்கும். புதிய அப்டேட் மூலம், மாஸ்க் அணிந்தப்படி இதனை தாராளமாக மேற்கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iphone Apple Ios
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment