Apple HomePod launched in India : இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது ஆப்பிள் ஹோம்பாட். இந்த டிவைஸானது அமேசானின் எக்கோ மற்றும் கூகுளின் ஹோமுக்கு எதிராக சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய டிவைஸான ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எப்போது விற்பனைக்கு வருகிறது என்பது தொடர்பான தகவல்களை இன்னும் இந்தியாவின் ஆப்பிள் தளத்தில் வெளியிடவில்லை. இதன் விலை ரூ. 19,900 ஆகும்.
Advertisment
ஜூன் மாதம் 2017ம் ஆண்டு அமேசான் எக்கோ மற்றும் கூகுளின் ஹோம் ஆகிய இரண்டு டிவைஸ்களுக்கும் போட்டியாக இந்த டிவைஸ் அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிப்ரவரி மாதம் 2018ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கனடா, ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஸ்பீக்கரின் இதர சிறப்பம்சங்கள்
இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரின் ஆரம்பகட்ட விலையானது 349 டாலர்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய விலையில் ரூ. 24,900 ஆகும். தற்போது இதன் விலை 299 டாலர்களுக்கு விற்பனையாகி வருகிறது.
6.8 இன்ச் உயரம் மற்றும் 5.6 இன்ச் வைட் அளவு கொண்டுள்ள இந்த டிவைஸில் ஏ8 மைக்ரோசிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
6 மைக்ரோ ஃபோன்களும், 7 ட்வீட்டர்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் தனித்ஹ்டனி ஆம்ப்ளிஃபையர்கள் மற்றும் ட்ரான்ஸ்டியூசர்கள் உள்ளது.
மெஷ் ஃபேப்ரிக் வடிவமைப்பு கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் வெள்ளை மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது.