ஆப்பிள் ஐபேட் ப்ரோ 2018 அறிமுகம்... இந்தியாவில் இதன் விலையென்ன?

இந்த டிவைஸ்ஸின் ஆரம்ப விலையே 90,000 ரூபாய்...

ஸ்ருதி தபோலா

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய டிவைஸ்கள் நேற்று இரவு அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்டது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது ஐபேட் ப்ரோ 2018 தான். இதில் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோவின்  சிறப்பம்சங்கள், விலை, மற்றும் விற்பனைக்கு வர இருக்கும் தேதி குறித்த ஒரு பார்வை இதோ.

நான்கு வெவ்வேறு சேமிப்புத் திறன்களுடன் வெளியாக உள்ளது ஆப்பிளின் ஐபேட் ப்ரோ 2018. அவை முறையே 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1டிபி ஆகும்.

 

ஐபேட் ப்ரோ 2018 சிறப்பம்சங்கள்

  • 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மாடல்கள் இரண்டுமே எட்ஜ் டூ எட்ஜ் ரவுண்ட் கார்னர் லிக்விட் ரெட்டினா திரை கொண்டிருக்கிறது. இரண்டுமே 7எம்.எம். சிப்செட்டான A12X பயோனிக் சிப்பால் இயக்கப்படுகிறது. 7 கோர் கிராபிக்ஸ் பிரோசசிங் யூனிட் இதில் இணைக்கப்பட்டிருக்கிறது.
  • ஃபேஸ் ஐடியுடன் வரும் இந்த ஐபேட்களில் ஹோம் பட்டன்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • ரெசலியூசன் – 2732 x 2048 (12.9 இன்ச் மாடல்) மற்றும் 2388 x 1668 (11 இன்ச் மாடல்).
  • இதனுடைய தடிமன் (திக்னஸ்) வெறும் 9.9 எம்.எம். மட்டுமே. க்ரே மற்றும் சில்வர் வேரியண்ட்களில் வருகிறது.
  • ப்ரோமோசன் (ProMotion) தொழில்நுட்ப உதவியுடன் திரையின் ரெஃப்ரஸ் ரேட் 120Hz வரை ஆட்டோமேட்டிக்காக அப்டேட் ஆகும்.
  • பேட்டரி திறன் 10 மணி நேரம் வரை இந்த டிவைஸ்ஸை தங்கு தடையின்றி இயக்கும்.
  • இதன் ரியர் கேமரா 12 எம்.பி. செயல்திறன் கொண்டது. 4K வீடியோவினை 30 fps அல்லது 60 fps என்ற வேகத்தில் எடுக்க இயலும்.

மேலும் படிக்க : 90 லட்சம் போன்கள் விற்பனையாகியும் உற்பத்தி எண்ணிக்கை குறைக்கப்பட்ட ஐபோன் XR

12. 9 இன்ச் ஐபேட் ப்ரோ 2018 -ன் விலை

12.9 இஞ்ச் அளவுள்ள ஐபேட் ப்ரோக்களின் விலை ரூ. 89,900ல் இருந்து ஆரம்பமாகிறது (64 ஜிபி). 256 ஜிபி ஐபேடின் விலை ரூ. 1,03,900, 512 ஜிபி சேமிப்புத் திறன் கொண்ட ஐபேடின் விலை ரூ.1,21,900 ஆகும். 1 டிபியின் விலை ரூ. 1,57,000 ஆகும். இந்த விலைப்பட்டியல் வைஃபை ஆப்சன்களில் வரும் ஐபேட்களுக்கு மட்டுமே.

வைஃபை மற்றும் செல்லுலார் வெர்சன்களின் விலை

64 ஜிபி ஐபேடின் விலை ரூ. 1,03,900. 256GB ஐபேடின் விலை ரூ. 1,17,900, 512GB ஐபேடின் விலை Rs 1,35,900. 1TB சேமிப்புத் திறன் கொண்ட ஐபேடின் விலை Rs 1,71,900 ஆகும்.

விற்பனைக்கு வரும் நாள்

அமெரிக்காவில் ஐபேடின் விலை நவம்பர் 7ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது. ஆனால் இந்தியாவில் என்று வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close