ஆப்பிள் ஐஃபோன் 11-ன் அடிப்படை விலை ரூ .64,900, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 புரோ மேக்ஸ் முறையே ரூ .99,990 மற்றும் ரூ .1,09,990 எனத் தொடங்குகின்றன. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: நந்தகோபால் ராஜன்)
Advertisment
புதிய ஐqபோன்கள் அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த ஏ 13 பயோனிக் ப்ராசசரால் இயக்கப்படுகின்றன. மொபைல் ஃபோனின் உள்ளே வைக்கப்படும் மிக சக்திவாய்ந்த ப்ராசசர் இதுவாகும். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: நந்தகோபால் ராஜன்)
ஐஃபோன் 11, ஐபோன் எக்ஸ்.ஆர்-ஐப் போன்று, 6.1 அங்குல எல்.சி.டி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதே சமயம், ஐஃபோன் 11 ப்ரோ 5.8 இன்ச் டிஸ்ப்ளேவையும், ஐஃபோன் 11 புரோ மேக்ஸ் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. ஐஃபோன்களின் புரோ வகைகள் இரண்டும் சூப்பர் ரெடினா எக்ஸ்.டி.ஆர் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: நந்தகோபால் ராஜன்)
ஆப்பிள் ஐபோன் 11 கறுப்பு, வெள்ளை, லாவெண்டர், சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. புரோ வகை ஃபோன்கள் மிட்நைட் கிரீன், ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்ட் கலர்களில் கிடைக்கின்றன. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: நந்தகோபால் ராஜன்)
புதிய ஐபோன்கள் அனைத்திலும், அதன் ட்ரூடெப்த் சென்சாருக்கான வழிமுறைகள் உள்ளன. அதோடு ஃபேஸ் ஐடி 30 சதவீதம் மேம்படுத்தப்பட்டுள்ளது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: நந்தகோபால் ராஜன்)
இந்த புதிய ஐஃபோன்கள் அனைத்தும் செப்டம்பர் 27-ம் தேதி முதல் இந்தியாவில் கிடைக்கும். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்: நந்தகோபால் ராஜன்)