Nandagopal Rajan
Apple iPhone 11 max pro apple watches series 5 Apple Arcade : கலிஃபோர்னியாவில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில், நேற்று இரவு வெளியானது அந்த நிறுவனத்தின் மூன்று ஐபோன்கள், வாட்ச்கள் மற்றும் ஐபேட்கள். இதனை அந்நிறுவனத்தின் சி.இ.ஒ. டிம் குக் அறிமுகம் செய்து வைத்தார். அனைவராலும் மிகவும் ஆசையுடன் எதிர்பார்க்கப்பட்டது ஐபோன் 11 தான். ஆனால் அதன் விலை தான். இவ்வளவு விலைக்கு விற்றால் எப்படி இந்த ஐபோன்களை வாங்க இயலும் என்ற கேள்வி தான் மனதில் எழுகிறது.
புதிய ஐபோன்களில் என்னென்ன வசதிகள்- வீடியோ
ஐபோன் 11 விலை
ஆப்பிள் 10R ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் வெர்ஷன் தான் இந்த ஐபோன் 11. இரண்டு பின்பக்க கேமராக்கள் மற்றும் ஏ13 பையோனிக் சிப்புடன் வெளியாகியுள்ள இந்த ஐபோனின் விலை 699 டாலர்களாகும். அதாவது இந்திய விலைப்படி ரூ. 64,999. இரண்டு பின்பக்க கேமராக்களும் 12 எம்.பி. செயற்திறன் கொண்டவை. மற்றும் ஆப்டிக்கள் 2X ஜூம் லென்ஸினை பெற்றிருக்கிறது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மற்றும் 11 ப்ரோ மேக்ஸ் விலை
இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது. அனைத்தின் செயற்திறனும் 12 எம்.பி தான். இருப்பினும் அதில் ஒன்று வைட் கேமரா, மற்றொன்று டெலிபோட்டோ, மேலும் ஒன்று அல்ட்ரா வைட் கேமரா. மூன்று பின்பக்க கேமராக்களைக் கொண்ட முதல் ஐபோன் இதுவாகும்.
சூப்பர் ரெட்டினா திரை, மற்றும் சர்ஜிக்கல் க்ரேட் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கொண்ட வெளிப்புற அமைப்பு இந்த போனை மிகவும் அழகாக காட்சிப்படுத்துகிறது. இதல் விலை 999 அமெரிக்க டாலர்களாகும். இந்திய விலையில் ரூ. 99,900. ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் போனின் விலை 1099 டாலர்களாகும். இந்திய விலையில் ரூ. 1,09,900.
நேற்றைய நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் 5 வெளியிடப்பட்டது. பல கேமராக்களை இயக்கும் ஆற்றல் பெற்ற பயோனிக் ஏ13 சிப் வெளியிடப்பட்டது. மேலும் ரெட்டினா திரையுடன் கூடிய 10.2 இன்ச் ஐ-பேட் வெளியானது. 7ம் தலைமுறை ஐபேட் (seventh generation iPad) எனப்படும் இந்த ஐபேடில் ஏ10 ஃப்யூசன் சிப் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் கீ-போர்டுடன் இணைந்து வேலை செய்யும்.
ஆப்பிள் சர்வீஸ்கள்
ஆப்பிளின் சந்தா முறை கேமிங் சேவையான ஆப்பிள் ஆர்கேடும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. 100க்கும் மேற்பட்ட கேம்ங்களைக் கொண்டிருக்கும் அந்த சேவை 19ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. மாதம் தோறும் அதற்கான கட்டணம் $4.99 ஆகும்.
நவம்பர் 1ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வகையில் ஆப்பிளின் புதிய டிவி சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 100 நாடுகளில் இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம். சில சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக 5 பில்லியன் டாலர்கள் இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கேம்ஸ் ஆஃப் த்ரோனில் நடித்த ஜேஸன் மோமோவ் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இந்த இரண்டு சேவைகளும் வெறும் ரூ.99 என்ற கட்டணத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது.