Advertisment

இன்டோர் நேவிகேஷனுக்காக புதிய டெக்னாலஜி... ஐபோன் 11ன் விலை மிக அதிகமாக இருக்கலாம்!

இந்த மாற்றம் தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Apple iPhone 11 New Update, MPI Antenna, Liquid crystal polymer

Apple iPhone

Apple iPhone 11 New Update : இண்டோர் நேவிகேஷனை சிறப்பான முறையில் செயல்படுத்த பழைய ஆண்டனாக்களான லிக்விட் க்றிஸ்டல் பாliமருக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது ஆப்பிள் நிறுவனம். தற்போது அதற்கு பதிலாக modified-PI (MPI) antennas எனப்படும் எம்.பி.ஐக்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக ஆப்பிள் அனலிஸ்ட் மிங் சி கௌ ரிப்போர்ட் அறிவித்துள்ளது.

Advertisment

புதிய ஆண்டனாக்களால் அதிகமாகும் விலை

இதற்கு முன்பாக பயன்படுத்தப்பட்ட லிக்விட் க்றிஸ்டல் பாலிமர் ஆர்.எஃப் சிக்னல்களை அதிகம் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் டெக்னாலஜியும் லிமிட் செய்யப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் உணர்ந்துள்ளாதால் இந்த மாற்றம்.

எம்.பி.ஐ. மாற்றினால், விலையும் கணிசமான அளவு கூடும் என்பதால் கொஞ்சம் அச்சத்தில் தான் இருக்கின்றார்கள் வாடிக்கையாளர்கள். இதற்கு முன்பு கௌ ரிப்போர்ட்டில் 2020ம் ஆண்டு வெளியாகும் ஐபோனில் லிக்விட் க்றிஸ்டல் பாலிமர் தான் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த மாற்றம் தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020க்குள் இந்த பிரச்சனை முற்றிலும் சரி செய்யப்பட்டுவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ஒரே வருடத்தில் பேக்-டு-பேக் ஹிட்டடிக்கும் ஆப்பிள் ஏர்பாட்…

Iphone Apple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment