/tamil-ie/media/media_files/uploads/2021/09/iPhone13_Pro_NEW.jpg)
Apple iPhone 13 series : கடந்த வாரத்தில் அனைத்தும் தலைகீழாக இருந்தது. ஆனாலும் வாடிக்கையாளார்களின் வசைகள் பற்றி கொஞ்சமும் ஆப்பிள் கவலைப்பட்டது போன்று தெரியவில்லை. ஆப்பிள் ஐபேட் மினி முதல் புதிய ஐபோன் 13 வரையில் பல்வேறு சாதனங்களை டிம் குக் வெளியிட்டார். அனைத்துமே அப்கிரேட்களை மட்டுமே கொண்டுள்ளது தவிர புதிய சிறப்பு அம்சங்கள் ஏதும் ஆச்சரியமூட்டும் வகையில் அமையவில்லை.
ஐபோன் 13 முதல் அலையில் வருகிறது. மேலும் அதிக அளவு ஸ்டோரேஜ் இருந்த போதிலும் விலையில் எந்த மாற்றமும் இன்றி இந்தியாவிற்கு வருவது ஒரு நல்ல செய்தியாக இருக்கிறது. இது ஆப்பிளின் அடுத்த பெரிய வளர்ச்சி சந்தை எது என்பதில் கவனம் செலுத்துவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.’
வீட்டில் இருந்து பாடங்கள் படிக்கும் குழந்தைகளுக்காகவும், வேலை பார்க்கும் பெரியவர்களுக்கும் சிறப்பான அனுபவத்தை வழங்குவதற்காக ஆப்பிள் ஐபேடில் கொண்டு வரப்பட்ட புதிய அப்டேட்கள் ஆப்பிள் நிறுவனத்தின் பலத்தை அதன் சொந்த தயாரிப்பான சிலிக்கானால் ஏற்படுத்தியிருப்பது தெளிவாகிறது.
ஐபோன் 13 நான்கு பதிப்புகளில் ஆனால் ஒரே திரை அளவு மற்றும் ஆரம்ப விலையுடன் வருகிறது. ஆனால் அதிக ப்ரோசசிங் பவர், சிறந்த கேமராக்கள் மற்றும் இரட்டை சேமிப்பு பகுதி ஆகியவை ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினியை மேலும் சிறப்பாக்குகிறது.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த போன்களில் 5 நானோ மீட்டர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய ஏ15 பையோனிக் ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 கோர் சி.பி.யூ பொறுத்தப்பட்டுள்ளது. இந்த சிப்கள் போனை வேகமாகவும், ஸ்மார்ட்டராகவும் மாற்றுகிறது.
ஆப்பிள் தங்களின் அனைத்து டிவைஸ்களிலும் கேமராவை முன்னிலைப்படுத்துவது மிகவும் தெளிவாக தெரிந்த ஒன்று. எனவே புதிய ஐபோன்கள் கம்புடேஷனல் புகைப்படம் எடுக்கும் போது வீடியோவில் அல்காரிதம் அடிப்படையிலான தானியங்கி ஃபோகஸ் ஷிப்ட் மற்றும் பாயிண்ட்-அண்ட்-ஷூட் கேமராக்கள் மற்றும் கஸ்டமைஸ்ட் போட்டோ மோட்களுடன் ஒரு சினிமா பயன்முறை (Cinematic Mode) அனுபவத்தை தர முயற்சி செய்துள்ளது.
ஆப்பிளின் ப்ரோ மாடல்களைப் பயன்படுத்தும் தொழில் வல்லுநர்களுக்கு, புதிய ப்ரோரெஸ் வீடியோ உள்ளது, இது தொழில்துறை தரமான வீடியோ தரம் மற்றும் ஐபோனிலேயே பணிப்பாய்வு வழங்குகிறது. ஆப்பிள் இந்த ProRes வீடியோவை இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு புதுப்பிப்பாக உறுதி அளித்துள்ளது. 4கே ரெசலியூசனில் எடுக்கப்பட்ட ரா வீடியோவை போன்று இவை இருக்கும். இதற்கு முன்பு ஸ்மார்ட் போன்களில் நாம் காணாத சிறப்பம்சம் இதுவாகும். ஐபோன் புரோ தொடரில் அல்ட்ரா-வைட் கேமராவைப் பயன்படுத்தி ஆப்பிள் முதன்முறையாக மேக்ரோ போட்டோகிராஃபியை அறிமுகப்படுத்துகிறது.
ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் சிறந்த கிராபிக்ஸ் மற்றும் ProMotion-னுடன் கூடிய 5-கோர் GPU மற்றும் இந்த திறனை வெளிப்படுத்த தேவைப்படும் போது 10 ஹெர்ட்ஸ் முதல் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் வரை செல்லும் சூப்பர் ரெட்டினா எக்ஸ். டி.ஆர். திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. ஏன் என்றால் ஏற்கனவே சாம்சங் மற்றும் இதர ஆண்ட்ராய்ட் போன்களில் இந்த அம்சங்கள் அறிமுகம் செய்ய ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆப்பிள் இதை ஆன் செய்வதால், ஆப் சுற்றுச்சூழல் அமைப்பு இறுதியாக இதை ஒரு தரமாக ஏற்றுக்கொள்ளும். எனவே செயலிகளுக்குள் மென்மையான ஓட்டங்கள் மற்றும் தொலைபேசிகளில் சிறந்த பேட்டரி ஆயுள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/Apple-Watch.jpg)
இந்த ஆப்பிள் நிகழ்வில் ஐபோன்களுடன் மேலும் இரண்டு ஐபேட்களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம். 10.2 இன்ச் அளவு கொண்ட ஐபேட் ஏ13 பயோனிக் ப்ரோசசர் மூலம் இயக்கப்படும். அதே போன்று 8.3 இன்ச் அளவிலான ஐபேட் மினி புதிய ஏ15 பயோனிக் சிப்பை பயன்படுத்தியுள்ளது. இரண்டிலும் ஆப்பிள் பென்சில்களை பயன்படுத்த முடியும். இரண்டு ஐபேட்களிலும் சிறப்பான கேமரா அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் ஸூம் அழைப்புகளுக்கு பதில் சொல்ல ஏற்ற வகையில் கேமரா செயலிகளுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிளின் தலைமை நிர்வாகி டிம் குக் இந்த ஐபேட் மினியை ஆப்பிளின் மிகப்பெரிய மேம்பாடாக கூறினார். ஐபேட் மினி மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டு 5ஜி ஆதரவை பெற்றுள்ளது. இந்த அப்டேட்களுக்காக பல ஆண்டுகள் ஆப்பிள் டேப்கள் காத்துக் கொண்டிருந்தன. அதிக அளவிலான சேமிப்பு திறன்களை கொண்டிருப்பதாலும், 5ஜி ஆதரவுடன் வருவதாலும் இது நிச்சயமாக வலுவான போட்டியாளராக வர வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.