/indian-express-tamil/media/media_files/2025/09/15/apple-iphone-17-series-2025-09-15-18-43-01.jpg)
ஐபோன் 17 ப்ரோ வாங்க நல்ல சான்ஸ்: செப். 19 முதல் விற்பனை தொடக்கம்; டிஸ்கவுண்ட், இ.எம்.ஐ, ஆஃபர்கள் இதோ!
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 17 சீரிஸ் மாடல்களான ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, மற்றும் ஐபோன் 17 மேக்ஸ் ஆகியவை, இதுவரை இல்லாத புதிய மாடலான ஐபோன் ஏர் உடன் இந்தியாவில் வரும் 19-ம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ளன. செப்.12 அன்று முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், இந்த வாரம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஆவ் ட்ராப்பிங்' (Awe Dropping) நிகழ்வில், ஐபோன் 17 மாடல்களுடன், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஆப்பிள் வாட்ச் எஸ்.இ 3, மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்வின் முக்கிய ஈர்ப்பாக, ஆப்பிள் இதுவரை உருவாக்கியதிலேயே மிக மெலிதான ஐபோனான, வெறும் 5.6 மி.மீ தடிமன் கொண்ட ஐபோன் ஏர் அமைந்தது.
ஐபோன் 17 விலை மற்றும் கிடைக்கும் இடங்கள்
விலையைப் பொறுத்தவரை, ஐபோன் 17 (256GB) அடிப்படை மாடல் ரூ.82,900-ல் தொடங்குகிறது. இதன் ப்ரீமியம் மாடல்களான ஐபோன் 17 ப்ரோ (256GB) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (256GB) ஆகியவை முறையே ரூ.1,34,900 மற்றும் ரூ.1,49,900 விலையில் வருகின்றன. முற்றிலும் புதிய, மெலிதான ஐபோன் ஏர் மாடல் ₹1,19,900-ல் இருந்து தொடங்குகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
புதிய ஐபோன்களை எங்கே வாங்கலாம்? கடந்த ஆண்டுகளைப் போலவே, மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் புனேவில் உள்ள ஆப்பிளின் சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு நொய்டாவில் ஒரு புதிய கடையையும், மும்பையில் இரண்டாவது கடையையும் திறக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. ஆப்பிளின் சொந்த ஆன்லைன் ஸ்டோர், பிளிப்கார்ட், அமேசான், பிளிங்கிட் போன்ற மின் வணிக மற்றும் விரைவு வணிக தளங்களிலும் ஐபோன் 17 வரிசை மற்றும் ஐபோன் ஏர் கிடைக்கும்.
அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களின் சலுகைகள்
புதிய ஐபோன் சீரிஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் இங்க்ராம் மைக்ரோ இந்தியா போன்ற ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலமாகவும் விற்பனைக்குக் கிடைக்கும். இந்நிறுவனங்கள் வழங்கும் இ.எம்.ஐ, தள்ளுபடி மற்றும் பரிவர்த்தனை சலுகைகள் விவரங்கள் பற்றி பார்க்கலாம்.
குரோமா (Croma): செப்.19 முதல் 206 நகரங்களில் உள்ள 574 குரோமா கடைகளிலும், அதன் இணையதளம் வழியாகவும் புதிய ஐபோன் வரிசையை வாங்கலாம். ஐபோன் 17 மாடலுக்கு, ரூ.6,000 உடனடி டிஸ்கவுண்ட், 6 மாதங்களுக்கான வட்டியில்லா இ.எம்.ஐ வசதியும் கிடைக்கிறது.
இங்க்ராம் மைக்ரோ இந்தியா (Ingram Micro India): ஐபோன் 17 மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 மாடல்களுக்கு 24 மாதங்கள் வரை வட்டியில்லா இ.எம்.ஐ-யை வழங்குகிறது. மேலும் ஐபோன் 17 வரிசை மற்றும் ஐபோன் ஏர் வாங்குபவர்களுக்கு ரூ.7,000 வரை பரிவர்த்தனை போனஸ் வழங்கப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 மற்றும் அல்ட்ரா 3 மாடல்களுக்கு ரூ.2,000 வரை பரிவர்த்தனை போனஸ் கிடைக்கும்.
விஜய் சேல்ஸ் (Vijay Sales): அனைத்து புதிய ஐபோன் 17 மாடல்களுக்கும் முன்பதிவு இப்போது ஏற்கப்படுகிறது. ஐபோன் 17-ன் 256GB மாடலுக்கு ரூ.6,000 உடனடித் தள்ளுபடியும், 2TB மாடல்கள் மற்றும் ப்ரோ மாடல்களுக்கு ரூ.4,000 தள்ளுபடியும் கிடைக்கும். ஐபோன் 17-க்கான மாதாந்திர தவணை முறை ரூ.4,471-ல் இருந்து தொடங்குகிறது. ஐபோன் ஏர் வாங்குபவர்களுக்கு எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் ரூ.4,000 உடனடித் தள்ளுபடி உண்டு, அதன் மாதாந்திர தவணை ரூ.5,348-ல் தொடங்குகிறது.
இந்த முறை, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 வரிசையின் விலையை சற்றே அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஐபோன் 16 ப்ரோ வரிசையை விட, ஐபோன் 17 ப்ரோ வரிசை மாடல்களின் விலை இந்தியாவில் அதிகமாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.