ஐபோன் 11ன் புதிய அப்டேட்... எப்போது வெளியாகும் புதிய போன்?

மூன்றாவது சென்சார் சோனி நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் என ஆப்பிள் அனலிஸ்ட் மிங்க் - சி கௌ அறிவித்துள்ளது.

மூன்றாவது சென்சார் சோனி நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் என ஆப்பிள் அனலிஸ்ட் மிங்க் - சி கௌ அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Apple iPhone 2019 series Camera Features

Apple iPhone 2019 series Camera Features

Apple iPhone 2019 series Camera Features : உலகமெங்கும் அதிக அளவு வாடிக்கையாளர்களை கொண்ட ஆப்பிள் நிறுவனம் இந்த வருடம் வெளியிட இருக்கும் ஐபோனின் சிறப்பம்சங்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தலை சிறந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வழங்கி வருகிறது இந்நிறுவனம்.

Advertisment

12 எம்.பி. செல்ஃபி கேமரா

இந்த வருடம் வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போனில் இடம் பெற இருக்கும் கேமராக்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.  கடந்த ஆண்டு வெளியான ஆப்பிள் போன்களில் 7 எம்.பி செல்ஃபி கேமரா தான் இருந்தது. அதிலும் ஃபேஸ் ஐடி செட்டப் - இடம் பெற்றிருந்தது.  இம்முறை வெளியாக இருக்கும் போன்களில் 7 எம்.பிக்கு பதிலாக 12 எம்.பி. செயல்திறன் கொண்ட செல்ஃபி கேமரா பொருத்தப்பட உள்ளது.

Apple iPhone 2019 series Camera Features - Rear Camera

Advertisment
Advertisements

மேலும் இந்த வருடம் வெளியாக உள்ள போனில் மூன்று கேமராக்கள் இணைக்கப்பட உள்ளது. அதன் செயல்திறன்கள் முறையே 12MP+12MP+12MP ஆகும். முதல் லென்ஸ் வைட் ஆங்கிளிற்காகவும், டெலிஃபோட்டோவிற்காக இரண்டாவது லென்ஸும், மூன்றாவது லென்ஸ் அல்ட்ரா வைட் ஆங்கிளிற்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.  மூன்றாவது சென்சார் சோனி நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் என ஆப்பிள் அனலிஸ்ட் மிங்க் - சி கௌ அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : பேக்-டூ-பேக் ஹிட்டடிக்க காத்திருக்கும் ஏர்பாட்

இதன் விலை சற்று கூடுதலாக இருப்பதால் நிறைய மக்களால் வாங்க இயலாமல் போவதும் வாடிக்கை தான். ஆனால் ஒவ்வொரு முறையும் போன்கள் வெளியிடப்படும் போது அதில் ஏற்படும் ஆர்வம் அலாதியானது.  சில நேரங்களில், எதிர்பார்த்த அளவிற்கு போன்கள் விற்பனை ஆகவில்லை என்றால் அதன் விலையை குறைப்பதையும் வாடிக்கையாகவே கொண்டுள்ளது இந்நிறுவனம். சமீபத்தில் இதனுடைய எக்ஸ் சீரியஸ் போன்களின் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : களைக்கட்டும் ஸ்மார்ட்போன் மார்க்கெட்… மே மாத புதுவரவுகள் என்னென்ன?

Apple

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: