பட்ஜெட் விலையில் புதிய ஐபோன்கள்: தாமதம் ஏன்?

ஐபோன் 9 மற்றும் இதர வேரியண்ட்கள் வெளிவருதில் கால தாமதம் ஏற்படலாம்.

By: July 26, 2018, 6:22:20 PM

Apple iPhone New Update: 6.1 அங்குல பட்ஜெட் ஐபோன் வெளியாவதற்கு சிறிது காலம் ஆகலாம். எல்.சி.டி திரையில் வரும் இந்த போனின் உற்பத்திக்கு அதிக காலம் தேவைப்படும் என்பதால் விற்பனை தாமதம் என தகவல் வெளிவந்துள்ளது.

மோர்கன் ஸ்டேன்லி அனலிஸ்ட் கேட்டி இதைப்பற்றி கூறும் போது எல்.இ.டி பேக்லைட் போன் வருவதற்கு சுமார் ஒரு மாத காலம் தாமதமும், எல்.சி.டி ஐபோன் வருவதற்கு சுமார் 6 வார காலமும் தாமதம் ஏற்படும் எண்று கூறியிள்ளார்.

இந்த வருடத்திற்கான ஐபோன் 9 விற்பனை வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளது. ஆனால் இந்த இரண்டு பட்ஜெட் போன்களின் உற்பத்தியின் தாமதம் காரணமாக இந்த இரண்டு போன்களும் அக்டோபர் மாதத்திற்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்று தகவல் வருவது முதல் முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தாமதம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

கேட்டி ஹூபர்ட்டி அவர்களின் செய்திப்படி இயல்பாக வரும் 5.8 அங்குல ஐபோன் எக்ஸ் மற்றும் 6.1 அங்குல ஐபோன் எக்ஸ் ப்ளஸ் போன்கள் குறிப்பிட்ட நேரத்தில் விற்பனைக்கு வரும். இந்த இரண்டு போன் களின் விலைகள் முறையே 800 அமெரிக்க டாலர்கள் மற்றும் 1000 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

மூன்று போன்களும் நோட்ச் திரையுடன் கூடிய ஃபுல் டிஸ்பிளேவாகவே வெளிவரும் என்றும் 6.1 அங்குல பட்ஜெட் போன் மட்டும் இளஞ்சிவப்பு, நீலம், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு ஆகிய நிறங்களில் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Apple iphone 6 1 inch lcd will not available october says analyst

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X