2022-ஐ 'Peak Performance' நிகழ்வோடு தொடங்கியிருக்கிறது ஆப்பிள். இந்நிகழ்ச்சி நிறுவனத்தின் இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி செயலியில் ஒளிபரப்பானது. இதில், ஆப்பிள் நிறுவனம் மேக் ஸ்டூடியோ, ஐபோன் SE 5g, M1 அல்ட்ரா சிப் என புதிய அம்சங்களை கொண்ட சாதனங்களை வெளியிட்டுள்ளது.
Advertisment
ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையிலான ஐபோன் SE மாடலை அறிமுக செய்யவுள்ளதாக பேச்சு பரவலாக இருந்த நிலையில், இந்த புதிய ஐபோன் SE 5g மாடலின் விலையும், சிறப்பு அம்சங்களும் மக்களிடேயை வரவேற்பை பெற்றுள்ளது. இது, ஐபோன் SE 2020 மாடலின் வெற்றியை தொடர்ந்து, புதிய அப்டேட்களுடன் வந்துள்ளது.
ஐபோன் SE 5G மாடலின் விலை, சிறப்பு அம்சங்களை கீழே காணலாம்.
4.7 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்பிளே
டிஸ்பிளேயில் 625 நிட்ஸ் பிரைட்னஸ் ஆதரவு
ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப் (இது ஐபோன் 13-இல் பயன்படுத்தப்பட்ட சிறந்த செயல்திறன் கொண்ட புராசஸர் ஆகும். SE மாடலுக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது)
ioS 15 இயங்குதளம்
12 மெகாபிக்சல் f/1.8 அபெர்ச்சர் கொண்ட வைட் ஆங்கிள் ஒற்றை கேமரா
செல்பிக்கு 7 மெகாபிக்சல் f/2.2 கேமரா
5ஜி நெட்வொர்க்
64ஜிபி, 128ஜிபி, 256ஜிபி ஸ்டோரேஜ்
15 மணிநேரம் வீடியோ ப்ளேபேக் வசதி
20W பாஸ்ட் சார்ஜிங்
விலை விவரம்
ரெட், ஸ்டார்லைட், மிட்நைட் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளின் ஐபோன் எஸ்இ 2022 அறிமுகமாகி உள்ளது
ஐபோன் SE 5G 64ஜிபி வேரியண்ட் அமெரிக்காவில் 429 டாலருக்கும், இந்தியாவில் ரூ43 ஆயிரத்து 900க்கும் அறிமுகமாகியுள்ளது. இது பழைய ஐபோன் SE 2020 மாடல் விலை 42,500 ரூபாயுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். இந்த ஐபோன் SE 5G போனின் விற்பனை, மார்ச் 11 ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil