Apple Iphone Tamil News, Apple Iphone event ஆப்பிள் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டின் செப்டம்பர் மாதத்திலும் புதிய ஐபோன்கள், ஹை-புரோபைல் கேட்ஜெட்டுகள் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்தாண்டு கொரோனா தாக்கத்தால் புதிய போன்களின் அறிமுகம் ஒத்திப்போகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைய துவங்கியுள்ளது. திட்டமிட்டபடி, புதிய ஐபோன்கள் உள்ளிட்டவைகளின் அறிமுகம், இந்தாண்டும் செப்டம்பர் மாதத்திலேயே நடைபெற உள்ளது. ஆப்பிள் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக, ஐபோன்கள் மட்டுமல்லாது, ஆப்பிள் வாட்ச் உள்ளிட்டவைகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
Apple Iphone event, Apple Iphone 12 series
Apple’s fall hardware event நிகழ்ச்சியில், இந்தாண்டு இந்த பொருட்கள் எல்லாம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
iPhone 12 series
ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக, இந்தாண்டு 3 வெவ்வெறு ஸ்கிரீன் சைஸ்களில் 4 புதிய ஐபோன் 12 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. 5.4 இஞ்ச் ஐபோன் 12, 6.1 இஞ்ச் ஐபோன் 12 மேக்ஸ், 6.1 இஞ்ச் ஐபோன் 12 ப்ரோ, மற்றும் 6.7 இஞ்ச் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஐபோன்கள் அறிமுகம் ஆக உள்ளன. இந்த 4 புதிய ஐபோன்களும் ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட், ஹை குவாலிட்டி ஓலெட் டிஸ்பிளே, மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், 3டி டெப்த் சென்சிங் டெக்னாலஜியுடன் இது வருகிறது. பேசிக் மாடல் ஐபோன் 12ன் விலை 649 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன் 12 சீரிஸ் உடன் இயர்பட்ஸ் மற்றும் பவர் அடாப்டர் வருவதில்லை.
Apple Watch Series 6
புதிய ஆப்பிள் வாட்ச் மாடல் இந்தாண்டு அறிமுகம் செய்வது உறுதியாகியுள்ளது. புதிய வசதிகளுடன் மற்றும் அப்டேடட் புராசசர்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6ல் sleep-tracking வசதியுடன், blood oxygen monitoring சென்சாரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Apple TV
ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் டிவி ஸ்டிரீமிங் பாக்ஸை அறிமுகப்படுத்த உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், அது தற்போது சாத்தியமாகும் நிலை தெரியவந்துள்ளது. ஏ12எக்ஸ் புராசசர், இந்த ஆப்பிள் டிவிக்கு உயிர் ஊட்டஉள்ளது. 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Apple AirTags
ஆப்பிள் நிறுவனம், புதிய லொக்கேசன் டிராகிங் டிவைசை, ஆப்பிள் ஏர்டேக் என்ற பெயரில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. டைல் நிறுவனத்தின் புளுடூத் டிராக்கிங் டிவைஸை இது ஒத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவைஸை, சிறிய சிடி முதல் லக்கேஜ், பேக்பேக், ஹேண்ட்பேக் உள்ளிட்டவைகளில் மாட்டிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
HomePod Mini
HomePod Miniயும் பல மாதங்களாக அறிமுகமாகும் என்ற தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதன் விலை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.
AirPods Studio
ஏர்பாட்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்பாட்ஸ் ஸ்டூடியோ என்று பெயரிடப்பட்டுள்ள இதன் விலை 399 டாலர்களாக இருந்தது. தற்போது வெளியாக உள்ள டிவைஸ், சோனி மற்றும் பாஸ்ச் ஹெட்போன்களுக்கு கடும்போட்டியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது, என்ட்ரி லெவல் ஐ பாட் அறிமுகமாகவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.