ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த வெளியீடான ஐபோன் X சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டு மிகவும் பிரபலம் அடைந்தது. வெளியிட்ட ஒரு சில நாட்களிலே மொத்த இருப்பும் விற்று தீர்ந்தது. தற்பொழுது மீண்டும் எர்டெல் இந்திய ஆன்லைன் ஸ்டோரில் ஐபோன் X விற்பனை தொடங்குகிறது.
ஆப்பிளின் ஆன்லைன் விற்பனையாளரான Flipkartல் மொத்த ஐபோன் X இருப்பும் தீர்ந்துவிட்டது. மீண்டும் எப்பொழுது விற்பனைக்கு வரும் என Flipkart இன்னும் எந்த அறிவிப்பும் அளிக்கவில்லை. ஆனால் நீங்கள் எர்டெல் இந்திய ஆன்லைன் ஸ்டோரில் இருந்து பெறலாம். 64ஜிபி கைபேசி ரூ. 89,000க்கும் 256ஜிபி ரூ. 1,02,000க்கும் விற்கப்படுகிறது.
ஏர்டெல் அளித்த அறிவிப்பின் படி, நவம்பர் 3 அன்று முதல் முதலில் வெளியிடப்பட்ட ஐபோன் x கைபேசிகள் சில நிமிடங்களிலே விற்று தீர்ந்தது. ஏர்டெல் தனது போஸ்ட்பேய்ட் வாடிக்கையாளர்களுக்கு அன்லாக் ஐ போனை வழங்குகிறது. ஏர்டெல் ஸ்டோரில் வாங்குவதன் மூலம் ஏர்டெல் திட்டங்களை வாங்க வேண்டு என்ற எந்த வித கட்டாயமும் இல்லை. முழு பணம் செலுத்தி ஆர்டர் செய்தால், இலவசமாக ஏர்டெல் விநியோகம் செய்துவிடும்.
ஐபோன் x குறிப்பு மற்றும் வடிவமைப்பு:
ஆப்பிள் ஐபோன் X 5.8 அங்குலம் சூப்பர் ரெட்டினா திரையை கொண்டு வந்துள்ளது. கைபேசியின் முழு திரை மற்றும் எல்லா முனைகளிலும் டிஸ்ப்ளே இருக்கும். இதனால் ஹோம் பட்டனை நீக்கி உள்ளது ஐபோன். இதில் முக்கிய அம்சமாக பேஸ் அன்லாக்கை அறிமுகம் படுத்தியுள்ளது. அடுத்து இன்ப்ராரெட் சென்சார் கொண்ட டெப்த் கேமராவும் இதில் உள்ளது.
ஐபோன் 8 போல முழு கண்ணாடி மற்றும் மெட்டல் தோற்றத்தில் அமைந்துள்ளது. A11 பயோநிக் சிப் கொண்டுள்ளதால் 3டி கேம், AR போன்ற தொழில்நுட்பங்களை இணைத்துள்ளது. ஐபோனின் அடுத்த முக்கிய அம்சம் வயர்லெஸ் சார்ஜர், இருப்பினும் சார்ஜரை தனியாக வாங்கவேண்டும்.
தயாரிப்பில் சில சிரமங்கள் இருப்பதால் விற்பனைக்கு வருவதில் தாமதம் ஆகிறது. இந்த நெருக்கடி 2018 வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.